வாக்கு ஒப்புகைச்சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

வாக்குச் சீட்டு முறையில் மக்களவைத் தேர்தலை நடத்தவேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

வாக்கு ஒப்புகைச்சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
வாக்கு எண்ணிக்கை -கோப்புப் படம்
  • News18
  • Last Updated: April 8, 2019, 3:00 PM IST
  • Share this:
தொகுதிக்கு ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்குச்சீட்டு எண்ணிக்கையை சரிபார்க்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் மக்களவைத் தேர்தலை நடத்தவேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அந்த கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில், 22 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், ‘வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதத்தையும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டுகளில் 50 சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.


இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், ‘ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சோதனை செய்யவேண்டும்.

தற்போதைய நடைமுறையின்மீது, நம்பிக்கை இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பெரும்பான்மை மக்களுக்கு தேர்தல் அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த உத்தரவு. இந்த நடைமுறையிலும், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகாது’ என்று தெரிவித்தனர்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்