கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
மேலும், ஆறு வாரத்தில் அதற்கான விதிமுறைகளை வகுத்து இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரமுடியாமல் உயிரிழந்தவர்களுக்கும், சிகிச்சைக்குப் பின் மூன்று மாதங்கள் வரை வேறு இணை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களையும் கொரோனாவால் உயிரிழந்ததாகக் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
Also Read:
'மினி பாகிஸ்தான்' என ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: லைக்ஸுக்காக இளைஞர் செய்த விபரீதம்!
நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, கொரோனா இழப்பீடு குறித்த வழக்கு தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இழப்பீடு தொகையை முடிவு செய்வது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆணையமே தீர்மானிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
Also Read:
வயலின் பரிசாக கொடுத்த காவல்துறை ஆணையர்: இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த முதியவர்!
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த முடியுமா, பொருளாதார சிக்கல்கள் என்னென்ன, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யலாம் என தீர்ப்பு குறித்து, சட்ட அமைச்சகம், மற்றும் நிதித்துறையின் ஆலோசனையும் மத்திய அரசு கேட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் உலகளவில் கொரோனா உயிரிழப்புகளில் இன்று இந்தியா 4 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை பதிவு செய்த நாடாக மாறியிருக்கிறது. 6 லட்சம் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 5.2 லட்சம் மரணங்களுடன் பிரேசில் இரண்டாம் இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.