ப. சிதம்பரத்துக்கு தொடர் பின்னடைவு...! முன் ஜாமின் மனு அர்த்தமற்றது என்று நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினரின் ஆவணங்கள் கசிந்தது எப்படி என்பது குறித்தான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது.

ப. சிதம்பரத்துக்கு தொடர் பின்னடைவு...! முன் ஜாமின் மனு அர்த்தமற்றது என்று நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
ப. சிதம்பரம்
  • News18
  • Last Updated: August 26, 2019, 1:23 PM IST
  • Share this:
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமின் மனு அர்த்தமற்றதாகக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21-ம் தேதி டெல்லியில் உள்ள தனது இல்லத்திலிருந்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அடுத்த ஐந்து நாட்களுக்கு சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிதம்பரம் இதுவரையில் சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மெளனம் காப்பதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட ஐந்து நாள் காவல் இன்று முடிவடைவதால், அவர் இன்று மீண்டும் ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது, அவருக்கான காவலை நீட்டிக்க சிபிஐ கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே, சிபிஐ கைதில் இருந்து தப்பிக்க டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்த நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ ஏற்கனவே சிதம்பரத்தை கைது செய்திருப்பதால் முன்ஜாமின் மனு அர்த்தமற்றதாக கூறிய நீதிபதி பாணுமதி அதனை தள்ளுபடி செய்தார்.

முன் ஜாமின் மனுவை ஒத்திவைத்தது நீதிமன்றம் என்பதால், அதனை ஜாமின் மனுவாக மாற்ற சிதம்பரம் தரப்பு வாதிட்டிருந்தது.

மேலும், அமலாக்கத்துறை பண மோசடி வழக்கின் கீழ் ப.சிதம்பரத்தை குற்றம் சுமத்திய வழக்கில் அவரைக் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், முன்னதாகவே சிபிஐ கட்டுப்பாட்டில் சிதம்பரம் உள்ளார்.உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிதம்பரத்தின் சார்பில் அமலாக்கத்துறையினரின் ஆவணங்கள் கசிந்தது எப்படி என்பது குறித்தான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. ப.சிதம்பரத்தின் சார்பில் அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி வருகிறார்.

மேலும் பார்க்க: வங்கிக் கணக்கே இல்லாத விவசாயிக்கு கடன் கட்டக்கோரி நோட்டீஸ்!
First published: August 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading