Home /News /national /

POCSO Case | போக்சோ வழக்கில் சர்ச்சை தீர்ப்பு: நீதிபதி புஷ்பா கனேடிவாலாவுக்கு பின்னடைவு

POCSO Case | போக்சோ வழக்கில் சர்ச்சை தீர்ப்பு: நீதிபதி புஷ்பா கனேடிவாலாவுக்கு பின்னடைவு

நீதிபதி புஷ்பா கனேடிவாலா

நீதிபதி புஷ்பா கனேடிவாலா

சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்யவைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்து நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்தார். போக்சோ வழக்கில் அவரது தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

மேலும் படிக்கவும் ...
    போக்சோ வழக்கு (pocso case) ஒன்றில் அடையின் மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேடிவாலா பதவி குறைப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 39 வயது நபர் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அமர்வு நீதிமன்றம் அந்த 39 வயது நபரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தது.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை  நீதிபதி புஷ்பா கனேடிவாலா , சிறுமியின் ஆடையை களையாமல் தான் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    உடலும் உடலும் நேரடியாக தொடர்பில் இல்லாததால் இது போக்சோ சட்டத்தில் வராது எனக் கூறி போக்சோ சட்டத்தில் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தார். இதேபோல் மற்றொரு வழக்கில் சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்யவைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்து தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: ஷீனா போரா உயிரோடு தான் இருக்கிறார் - ஷாக் கொடுத்த இந்திராணி முகர்ஜி - அதிரடி திருப்பம்


    நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் இந்த இரு தீர்ப்புகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதன் காரணமாக அவரை நிரந்திர நீதிபதியாக நியமிக்க அளித்த ஒப்புதல் உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்பப் பெற்றது.

    அவரது  ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், அதன் பின்னர் மீண்டும் அவர் மாவட்ட நீதிபதியாக பதவி குறைப்பு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த முடிவு தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக எடுக்கப்பட்டது அல்ல. தீர்ப்பு வழங்கும்போது அவருக்கு பயிற்சியும், அனுபவமும் தேவைப்படுகிறது என்பதால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு

    Published by:Murugesh M
    First published:

    Tags: HighCourt, POCSO case

    அடுத்த செய்தி