ரஞ்சன் கோகாய்க்கு எதிரான ‘பெரிய சதி’ குறித்த விசாரணைகளை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்

நீதிபதி ரஞ்சன் கோகாய்.

ஓய்வு பெற்ற நீதிபடி பட்நாயக் குழுவினால் வாட்ஸ் அப் செய்திகள் போன்ற மின்னணு ஆவணங்களை மீட்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

 • Share this:
  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் பின்னணியில் உள்ள பெரிய சதி குறித்த விசாரணைக்கான நடைமுறைகளை முடித்து வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

  உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிருஷ்ணன் தலைமையிலான அமர்வு,  '2 ஆண்டுகளாகி விட்டது, வழக்கு தொடர்பான மின்னணு ஆவணங்களை மீட்பதில் சாத்தியக் குறைவு உள்ளதால் வழக்கை முடித்து வைப்பதாக' தெரிவித்தது.

  ஓய்வு பெற்ற நீதிபடி பட்நாயக் குழுவினால் வாட்ஸ் அப் செய்திகள் போன்ற மின்னணு ஆவணங்களை மீட்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். எனவே இந்த வழக்கை இழுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்று முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  2014-ல் உச்ச நீதிமன்றத்தில் சேர்ந்த ஒரு பெண் 2018-ல் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வீட்டு அலுவலகத்தில் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த போது ரஞ்சன் கோகாய் தன்னிடம் பலமுறை தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதனையடுத்து எழுந்த சர்ச்சைக்கு பிறகு ரஞ்சன் கோகாய் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதாவது அலுவலகத்தை முடக்கவும் நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்தவும் மேற்கொள்ளப்பட்ட சதியே தன் மீதான பாலியல் புகார் என்றார்.

  இதனையடுத்து உச்ச நீதிமன்ற கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது, அதில் தற்போதைய தலைமை நீதிபதி போப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றனர், இந்தக் கமிட்டி பாலியல் புகாரை விசாரித்து குற்றச்சாட்டில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறி ரஞ்சன் கோகாய் சுத்தமானவர் என்று சான்றிதழ் அளித்தது.

  இந்த விசாரணைக்கு பாதிக்கப்பட்டதாகக் கூறும் அந்த பெண் ஊழியர் ஒத்துழைக்க மறுத்தார், காரணம் தனக்கு சட்ட உதவியை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

  ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது அசாம் மாநில குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) குறித்து சில கடினமான முடிவுகளை எடுத்ததால் அவரை ஏதாவது ஒன்றில் சிக்கவைக்க சதி இருக்கலாம் என்ற அளவில் உச்ச நீதிமன்றம் தானாகவே முன் வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

  2019, ஏப்ரல் 25ம் தேதி நீதிபதி பட்நாயக் கமிட்டியை அமைத்து விசாரித்தது, அந்தக் கமிட்டி தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்த போது அவர் அளித்த சில தீர்ப்புகளினால் அவருக்கு எதிராக பெரிய சதி வலையாக இந்த பாலியல் குற்றச்சாட்டு இருக்கலாம் என்ற ரீதியில் எங்களால் விசாரிக்க முடியவில்லை என்று பட்நாயக் கமிட்டி தெரிவித்ததாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  இதனையடுத்து வழக்கு விசாரணையை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

  உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த ரஞ்சன் கோகோய் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வுபெற்றார். இந்நிலையில் அவரை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிந்துரைத்தார் இதனையடுத்து இப்போது எம்.பி.ஆக உள்ளார் ரஞ்சன் கோகாய்.
  Published by:Muthukumar
  First published: