சபரிமலை விவகாரம்... பிப்.3-ம் தேதி விசாரணை தொடக்கம் என தலைமை நீதிபதி அறிவிப்பு!

சபரிமலை விவகாரம்... பிப்.3-ம் தேதி விசாரணை தொடக்கம் என தலைமை நீதிபதி அறிவிப்பு!
எஸ்.ஏ.போப்டே
  • News18
  • Last Updated: January 31, 2020, 11:22 AM IST
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, வரும் 3-ம் தேதி தொடங்க உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அறிவித்துள்ளார்.

ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மற்ற வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 3-ம் தேதி தொடங்கும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.


தினமும் விசாரணை நடைபெறும் என்றும், மனுதாரர்கள் சார்பில் தலா ஒரு மூத்த வழக்கறிஞர் மட்டுமே வாதிட முடியும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

Also see...
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading