வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளியிட வேண்டும்! அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்

வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளியிட வேண்டும்! அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
  • Share this:
சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதையும் அவர்கள் மீது எத்தனை குற்ற வழக்குகள் இருந்தது என்பதை அரசியல் கட்சிகள் அவர்களது இணையத்தில் பதிவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவழக்குகள் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரோஹின்டன் எஃப் நாரிமன் தலைமையிலான நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் குற்றவழக்குகள் பின்னணி கொண்டவேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில், ‘இனிமேல் அனைத்து தேர்தல் கட்சிகளும் தங்களுடய வேட்பாளர்களின் குற்றவழக்குகள் குறித்த விவரங்களுடன் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவிடவேண்டும். நீதிமன்றத்தில் வேட்பாளர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதனையும் தனியாகக் குறிப்பிட வேண்டும். அவர்களுடைய படிப்பு விவரங்களையும், மற்ற விவரங்களையும் சேர்க்கவேண்டும். ஒரு வேட்பாளரை எதற்காக தேர்வு செய்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த விவரங்களை, கட்சிகளின் சமூக வலைதள பக்கங்களிலிலும் வெளியிட வேண்டும்.


வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதைக் காரணமாகக் குறிப்பிடக் கூடாது. வேட்பாளரைத் தேர்வு செய்த 48 மணி நேரத்தில் வேட்பாளர் குறித்த விவரத்தை இணையத்தில் பதிவேற்றியிருக்க வேண்டும். மேலும், இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடமும் வழங்கவேண்டும். வேட்பளார்களின் முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை நாட வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

Also see:
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்