Home /News /national /

கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது ஸ்டேட் வங்கி

கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது ஸ்டேட் வங்கி

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பெண்கள் 3 மாத கருவுற்ற காலத்தைக் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் வங்கி பணி நியமனத்திற்கான எல்லா தேர்ச்சியை பெற்றிருந்தாலும் குறைந்த பட்சம் 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

  கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

  பாரத ஸ்டேட் வங்கி தரப்பிலிருந்து கடந்த 31.12.2021 அன்று பணி நியமனங்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், மகளிர் கருவுற்ற காலத்தில் பணி நியமனத் தேர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும் அவர்கள் கருவுற்ற காலத்தில் 3 மாதங்களை எட்டி இருந்தால் அவர்களுக்கு பணி நியமனம் தரப்படாது. அவர்கள் "தற்காலிகமாக தகுதி அற்றவர்கள்". அவர்கள் "பிரசவத்திற்கு பின்னர் 4 மாதம் கழித்து பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  அதாவது, பெண்கள் 3 மாத கருவுற்ற காலத்தைக் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் வங்கி பணி நியமனத்திற்கான எல்லா தேர்ச்சியை பெற்றிருந்தாலும் குறைந்த பட்சம் 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

  இதையும் படிங்க : பட்ஜெட் 2022: தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியம்சங்கள்!!
  ஸ்டேட் வங்கியின் இந்த நிலைப்பாடு தொடர்பாக, பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்து வந்தனர். 62 ஆயிரம் மகளிர் உள்பட 2.50 லட்சம் பணியாளர்களுடன் செயல்படும் ஸ்டேட் வங்கியிலேயே, இந்த அளவு பாலின பாகுபாடு காட்டப்படுகிறதா என்றளவுக்கு விமர்சனங்கள் எழுந்தன.


  இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்த மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன், ஸ்டேட் வங்கியின் நிலைப்பாடு உளவியல் ரீதியாக பெண்களை பாதிக்காதா? அதுவும் கருவுற்ற காலத்தில் அமைதியான மன நிலையை உறுதி செய்ய வேண்டியது முக்கியமில்லையா? சிலருக்கு உடனடி வேலை வாய்ப்பு என்பது அவர்களின் வாழ்க்கையை நகர்த்துவதற்கான முக்கியத் தேவை என்ற நிலை இருக்கலாம். அரசு நிறுவனங்கள் எனில் "மாதிரி பணி அமர்த்துபவர்" (Model Employer) ஆக இருக்க வேண்டாமா?

  இதையும் படிங்க : இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு

  கருவுற்ற பெண்கள் வந்தால் பேருந்தில் கூட எழுந்து நின்று இடம் தருகிற பண்பாடு கொண்ட இந்தியச் சமுகத்தில் அவர்களுக்கான இடத்தைப் பறிக்கிற ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்தை என்ன சொல்வது? இது அப்பட்டமான, புரையோடி சீழ் பிடித்த பெண்ணடித்தன்மை சிந்தனையின் வெளிப்பாடு. இந்திய அரசியல் சாசன பிரிவுகள் 14,15,16 உறுதி செய்கிற சமத்துவத்திற்கு விரோதமானது. வேலை வாய்ப்பில் பாலின பாரபட்சம் கூடாது என்கிற 16 (2) பிரிவை அப்பட்டமாக மீறுவது.

  பெண்கள் உங்களிடம் அனுதாபத்தை யாசிக்கவில்லை. உரிமைகளை கேட்கிறார்கள். பெண்களின் உரிமைகள் எல்லாம் நீண்ட நெடிய போராட்டங்கள் வாயிலாக சமூக சீர்திருத்த இயக்கங்களால், மாதர் அமைப்புகளால் ஈட்டப்பட்டவை. நவீன சமூகத்தின் சமத்துவ சிந்தனைகளை, பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்?

  இதையும் படிங்க : கோவிஷீல்ட் & கோவாக்சின் தடுப்பூசி டோஸின் விலை ரூ.275 ஆக குறைக்கப்படும் - எப்படி? எப்போது?

  ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும், கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையப்பட வேண்டும் என இன்று மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா அவர்களுக்கும், ஸ்டேட் வங்கி தலைவருக்கும் கடிதங்களை எழுதியுள்ளேன் என்று கூறியிருந்தார். இதேபோன்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.  இந்த நிலையில், கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றுள்ளது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டதாக ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
  Published by:Musthak
  First published:

  Tags: SBI

  அடுத்த செய்தி