Home /News /national /

விரைவில் வருகிறது சோலார் ஏடிஎம்: எஸ்பிஐ வங்கியின் புதுமுயற்சி

விரைவில் வருகிறது சோலார் ஏடிஎம்: எஸ்பிஐ வங்கியின் புதுமுயற்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
    எஸ்பிஐ வங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10000 ஏடிஎம்-களில் சோலார் தகடுகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.

    எஸ்பிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நேற்று இதுகுறித்துக் கூறும்போது, `` எஸ்பிஐ வங்கி இதுவரை 1200 ஏடிஎம்-களில் சோலார் தகடுகளைப் பதித்து அதன் மூலம் மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வருகிறது. இதை விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 2 ஆண்டுகளில் 10000 ஏடிஎம் மையங்களில் சோலார் தகடுகளைப் பதித்து, அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி ஏடிஎம்-களை இயக்க உள்ளோம். அதிகரித்து வரும் கார்பன் மாசை கட்டுப்படுத்தவே இந்த முயற்சியில் வங்கி ஈடுபட்டுள்ளது.

    நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி இயங்கிவரும் 150 கட்டங்களில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தி வருகிறோம். 2020-க்குள் இந்த எண்ணிக்கையை 250-ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். சோலார் தகடுகள் பொருத்தி, அதன் மூலம் ஏடிஎம்-கள் இயங்குவதை கடந்த 2008-ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். கிராமப் புறங்களில் சோலார் மூலம் இயங்கும் ஏடிஎம்-களை முதன்முதலாக நிறுவிய வங்கி எஸ்பிஐ. சோலார் பொருத்தப்பட்ட ஏடிஎம்-களால் செலவு குறைவது மட்டுமின்றி, அவற்றை எளிதாக எங்கு வேண்டுமானாலும் இடம் மாற்றலாம்.

    இந்த முயற்சியை பிரபலமாக்க, சென்னை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 15 நகரங்களில், மாரத்தான் போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் வங்கிக்கு சொந்தமான அனைத்து வாகனங்களையும், எலெக்ட்ரிக் வாகனக்களாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: SBI ATM, SBI Bank, Solar ATM

    அடுத்த செய்தி