ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Vinothini Aandisamy | news18
Updated: August 20, 2019, 12:15 PM IST
ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!
கோப்புப் படம்
Vinothini Aandisamy | news18
Updated: August 20, 2019, 12:15 PM IST
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த `யோனோ' கேஷ் அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

பணம் எடுக்க வேண்டும் என்றால், யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு எண் அனுப்பி வைக்கப்படும்.


பின்னர் ஏ.டி.எம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் தற்போது பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

Loading...

Also see...

First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...