Home /News /national /

வங்கி ஊழியரின் சிறிய பிழை.. தவறான கணக்குகளுக்கு ரூ.1.5 கோடி டிரான்ஸ்ஃபர்!

வங்கி ஊழியரின் சிறிய பிழை.. தவறான கணக்குகளுக்கு ரூ.1.5 கோடி டிரான்ஸ்ஃபர்!

எஸ்.பி.ஐ.

எஸ்.பி.ஐ.

எஸ்.பி.ஐ ஊழியர் ஒருவர் ஒரு செய்த ஒரு மிகச் சிறிய பிழையால் ₹1,50,00,000, தவறான கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

     எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஒரு சில சமயங்களில் நம்மையும் மீறி ஏதேனும் ஒரு பிழை ஏற்பட்டு விடும். சில சமயங்களில் அந்த பிழையின் விளைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில்தான் எஸ்.பி.ஐ ஊழியர் ஒருவர்  செய்த மிகச் சிறிய பிழையால் ₹1,50,00,000, தவறான கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

    ஹிந்துவில் வெளியான ஒரு செய்தியின்படி, பெயர் குறிப்பிடப்படாத எஸ்.பி.ஐ ஊழியர் ஒருவர், தவறாக காப்பி பேஸ்ட் செய்ததால் தலித் பந்து திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதி, தவறுதலாக லோட்டஸ் ஹாஸ்பிடலைச் சேர்ந்த 15 ஊழியர்களின் கணக்குக்கு டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உழியருக்கும் ₹10,00,000 என்ற அடிப்படையில் 15 ஊழியர்களுக்கும், அவர்களின் சம்பள கணக்கில் பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டப்பட்டது. இந்த ₹15,00,00,000 நிதி என்பது தெலுங்கானா அரசின் தலித் பந்து நல திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

    அறியாமல் செய்த ஒரு சிறிய பிழை என்று இருந்தாலும் சம்மந்தம் இல்லாத கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தொகையும் பெரிய அளவில் இருப்பதால் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. மேலும், எஸ்பிஐ ரங்காரெட்டி மாநில கலெக்ட்ரேட் கிளையில் தான் இந்த ₹1,50,00,000 பரிமாற்றம் தவறுதலாக நிகழ்ந்து உள்ளது என்பதை ஹைதராபாத்தின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    15 நபர்களுக்கும் தலா ₹10,00,000 கிரெடிட் ஆன நிலையில், அனைவரையும் உடனடியாக அழைத்து பணத்தை  திருப்பி அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. 14 நபர்கள் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர். மகேஷ் என்ற ஒரு லேப் டெக்னிஷியனை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், ஒரு நபர் மட்டும் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    ALSO READ | தபால் பெட்டிகள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

    ஆனால் உடனடியாக மகேஷை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள வங்கி சார்பில் ஈடுபட்டிருந்தனர். இடையில், மகேஷ் தன்னுடைய கணக்கில் ₹10,00,000 டெபாசிட் செய்யப்பட்டதை, ஏதோ அரசாங்க நலத்திட்டத்தின் கீழ் தான்  இந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று தவறாக நினைத்துள்ளார். எனவே அதை தன்னுடைய கடன்களை அடைக்க பயன்படுத்தலாம் என்று செலவு செய்துள்ளார்.

    வங்கியில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தொடர்ந்து அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மகேஷ் பணத்தைத் திருப்பி தரவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் ஐபிசி 403 மூன்றாம் பிரிவின் கீழ் மகேஷ் மீது ஒரு புகாரை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து மகேஷ் 6,70,000 ரூபாயை வங்கிக்கு திருப்பி செலுத்தியுள்ளார். இன்னும் 3,30,000 ரூபாயை அவர் செலுத்த வேண்டும். வங்கி. ஊழியரின் ஒரு சிறிய பிழையால் இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்று போலீஸ் அதிகாரி பகிர்ந்துள்ளதாக செய்தி வெளியாகியது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி