எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்- இந்த எச்சரிக்கை உங்களுக்குதான்!

மாதிரிப் படம்

ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளில் சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் அச்செயலியின் நம்பகத்தன்மை, அது தொடர்பான கருத்துகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

  • Share this:
ஆன்லைன் பணமோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக  தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கிகளின் ஆன்லைன் சேவை விரிவடைந்துகொண்டு செல்லும் அதேவேளையில், ஆன்லைன் மூலம் பணமோசடி நடைபெறுவதும் அதிகரித்து வருகிறது.  ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்பதே கிடையாது.  வங்கிகள் எவ்வளது பாதுகாப்பானதாக தங்களது சர்வர்களை வைத்திருந்தாலும், ஒருவரின் வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை கொள்ளையடிக்க ஹேக்கர்கள் எப்போதும் முழு வீச்சில் செயலாற்றி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்,  பரிசுப் பொருட்களை தருகிறோம் பணம் தருகிறோம் என வரும் குறுஞ்செய்திகளில் இருக்கும் லிங்க்களிடம் இருந்து விலகியே இருங்கள் என்றும் அத்தகைய லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய லிங்க்களை கிளிக் செய்வது மூலம் தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்கள் திருடுபோகலாம் என்றும் எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கான பிரதமரின் கிஷான் திட்டத்தில் 5 முக்கிய மாற்றங்கள்!


இதேபோல் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளில் சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் அச்செயலியின் நம்பகத்தன்மை, அது தொடர்பான கருத்துகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிதி சார்ந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.



அங்கீகரிக்கப்படாத, பாதுகாப்பற்ற வலைத்தளங்களின் சில குக்கீகள் உங்கள் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்!


கே.ஒய்.சி. மோசடி இந்தியா முழுவதும் பரவியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள எஸ்.பி.ஐ. வங்கி, கே.ஒய்.சி.யை  புதுப்பிக்க கோரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.  இத்தகைய மோசடி குறித்து அறியவந்தால், http://cybercrime.gov.in. என்ற பக்கத்துக்கு சென்று புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Published by:Murugesh M
First published: