பிரபல சாக்சபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

பிரபல சாக்சபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்
  • News18
  • Last Updated: October 11, 2019, 8:46 AM IST
  • Share this:
புகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் காலமானார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1949 டிசம்பர் 11-ம் தேதி பிறந்தவர் கத்ரி கோபால்நாத்.  கே.பாலச்சந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து கோபால்நாத் பணியாற்றியுள்ளார்.

கத்ரி கோபால்நாத்தின் இசை சேவையை பாராட்டி 2004-இல் மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கியது. கத்ரி கோபால்நாத்துக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.


உடல்நலக்குறைவால் மங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்ரி கோபால்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also watch

 
First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading