• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வீர சாவர்கர் முஸ்லிம்களுக்கு எதிரியல்ல - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்!

வீர சாவர்கர் முஸ்லிம்களுக்கு எதிரியல்ல - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்!

Savarkar and mohan bhagawath

Savarkar and mohan bhagawath

இந்தியச் சமூகத்தில் பலரும் இந்துத்துவா மற்றும் ஒற்றுமை குறித்து பேசியிருக்கிறார்கள், ஆனால் சாவர்கர் மட்டுமே அவற்றை பலமாக பேசியிருக்கிரார். முன்னதாகவே நிறைய பேர் சத்தமாக அவற்றை பேசியிருந்தால் நம் நாடு பிரிவிணையை சந்தித்திருக்காது.

  • Share this:
சாவர்கர் முஸ்லிம்களுக்கு எதிரியல்ல, அவர் என்றுமே கலாச்சார ரீதியாக வேற்றுமை பார்த்தது கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

வீர சாவர்கர் குறித்த புத்தகமான ‘வீர சாவர்கர் - தேச பிரிவிணையை தடுத்திருக்கக்கூடிய மனிதர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் தலைவரான மோகன் பகவத், வீர சாவர்கரின் இந்துத்துவா கொள்கை, மக்களை அவர்களின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு முறைகளால் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று எப்போதுமே பரிந்துரைத்தது கிடையாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோகன் பகவத், “சாவர்கர் கூறுவார், நாமெல்லாம் ஒரே தாய்மண்ணின் மைந்தர்கள், நாமெல்லாம் சகோதரர்கள். எதற்காக நாம் மக்களை வேறுபடுத்த வேண்டும்?”

சாவர்கர் இஸ்லாமியர்களின் எதிரி கிடையாது என தெரிவித்த மோகன் பகவத், அவர் உருது மொழியில் நிறைய பாடல்கள், கவிதைகள் (ghazal) எழுதியிருப்பதாக தெரிவித்தார். இந்தியச் சமூகத்தில் பலரும் இந்துத்துவா மற்றும் ஒற்றுமை குறித்து பேசியிருக்கிறார்கள், ஆனால் சாவர்கர் மட்டுமே அவற்றை பலமாக பேசியிருக்கிரார். முன்னதாகவே நிறைய பேர் சத்தமாக அவற்றை பேசியிருந்தால் நம் நாடு பிரிவிணையை சந்தித்திருக்காது.

Also Read: டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணியில் 4 முக்கிய மாற்றங்கள் – 2 மாஜி கேப்டன்கள் அணியில் சேர்ப்பு!

பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடையாது. ஏனென்றால் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இதனை எப்போதும் மாற்றவும் முடியாது. நம் முன்னோர்கள் அனைவரும் ஒன்று தான், நாம் வழிபடும் முறை மட்டுமே வெவ்வேறு. சனாதன் தர்மத்தின் தாராளவாத கலாச்சாரத்தினால் நாம் பெருமை கொள்கிறோம். அந்த பாரம்பரியம் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது, அதனால்தான் நாம் அனைவரும் ஒன்றாக இங்கு வாழ்கிறோம்,

அது சாவர்க்கரின் இந்துத்துவாவாக இருந்தாலும் அல்லது விவேகானந்தரின் இந்துத்துவாவாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கலாச்சார தேசியத்தைப் பற்றி பேசுகிறார்கள், அங்கு மக்கள் தங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் வேறுபடுவதில்லை. என்று மோகன் பகவத் தெரிவித்தார்.

Also Read: ரூ.100 செலுத்தினால் 1000 ஆபாச வீடியோக்கள்.. டெலிகிராம் மூலம் அரங்கேறிய பிஸினஸ்!

இந்நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ராணுவ தந்திரவாதி சாவர்கர் என குறிப்பிட்டார். அவர் இந்திய சரித்திரத்தின் ஒரு ஐகான். அவர் என்னென்றும் நிலைத்திருப்பார். மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிஸ்ட் சிந்தாந்தவாதிகள் அவரை எப்போதும் தவறாகவே சித்தரித்து வருகிறார்கள், மகாத்மா காந்தியின் வேண்டுகோளை ஏற்று தான் சாவர்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கருணை மனுக்களை அனுப்பியதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: