ஹோம் /நியூஸ் /இந்தியா /

எடை குறைஞ்சாரா? 8 கிலோ கூடி இருக்கார்... சொகுசாக சாப்பிடும் சத்யேந்தர்.. வீடியோ வெளியிட்ட சிறை நிர்வாகம்!

எடை குறைஞ்சாரா? 8 கிலோ கூடி இருக்கார்... சொகுசாக சாப்பிடும் சத்யேந்தர்.. வீடியோ வெளியிட்ட சிறை நிர்வாகம்!

சில நாட்களுக்குப் முன்பு அமைச்சர் சிறையில் தனது மத நம்பிக்கைகளின்படி தனக்கு பச்சை உணவு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி நகர நீதிமன்றத்திற்கு சென்றார்.

சில நாட்களுக்குப் முன்பு அமைச்சர் சிறையில் தனது மத நம்பிக்கைகளின்படி தனக்கு பச்சை உணவு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி நகர நீதிமன்றத்திற்கு சென்றார்.

சில நாட்களுக்குப் முன்பு அமைச்சர் சிறையில் தனது மத நம்பிக்கைகளின்படி தனக்கு பச்சை உணவு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி நகர நீதிமன்றத்திற்கு சென்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  திகார் சிறையிலிருந்து புதன்கிழமையன்று ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினின் புதிய வீடியோக்கள் வெளிவந்தன. மேலும் 28 கிலோ குறைந்து விட்டதாக கூறிக்கொண்டு சத்யேந்தர் நல்ல உணவு, பழங்களை உட்கொண்டு 8 கிலோ கூடியுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  பணமோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்வதாகக் கூறப்படும் வீடியோக்கள் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களில் வைரலானது. வீடியோக்களில், சத்யேந்தருக்கு முதுகு, கால் மற்றும் தலை மசாஜ் செய்யும் காட்சி இருந்தது.

  சத்யேந்தருக்கு முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஜெயின் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக ஆம் ஆத்மி கூறியது. செவ்வாயன்று, வீடியோவில் காணப்படும் மசாஜ் செய்பவர் ஒரு பிசியோதெரபிஸ்ட் அல்ல, ஆனால் திஹாரில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர் என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன.

  இதையும் படிங்க: ஆதார் இருந்தால் ரூ.4.78 லட்சம் கடனுதவி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன?

  இந்நிலையில் சில நாட்களுக்குப் முன்பு அமைச்சர் சிறையில் தனது மத நம்பிக்கைகளின்படி தனக்கு பச்சை உணவு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி நகர நீதிமன்றத்திற்கு சென்றார்.

  அமலாக்க முகமையால் (ED) ஏற்படுத்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் மசாஜ் குறித்து ஜெயின், ஒவ்வொரு நிமிடமும் தான் அவதூறு செய்யப்படுவதாக கூறினார். 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு கூட சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை கிடைத்தது எனக்கு அப்படி அமைவதில்லை என்றும் குடிப்பிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

  தனது மத நம்பிக்கையின்படி உண்ணாவிரதத்தை கடைபிடிப்பதால், பழங்கள், உலர் பழங்கள் மற்றும் பேரீச்சம்பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை அவருக்கு வழங்குமாறு திகார் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய ஜெயின் மனுவுக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாயன்று அமலாக்க இயக்குநரகத்தின் (ED) பதிலைக் கோரியது.

  திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 12 நாட்களாக அவருக்கு மதத்தின் கீழ் வழங்கப்படும் அடிப்படை உணவுகளை சிறை நிர்வாகம் நிறுத்தியதாகக் கூறியது. ஆனால் செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 1 தேதியிட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

  அதில் அவர் பச்சை காய்கறிகள், பழங்கள், உலர் பழங்களை உண்ணும் காட்சி உள்ளது.

  மேலும் அவர் திகார் சிறைக்கு வந்ததில் இருந்து 28 கிலோ எடையை குறைத்ததாக கூறியிருந்தார். ஆனால் அதற்கு முரணாக சத்யேந்தர் ஜெயின் சுமார் 8 கிலோ எடை அதிகரித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Aam Aadmi Party, Jail, Viral Video