திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை! மேற்குவங்கத்தில் பரபரப்பு

மெழுகுவர்த்தி மூலம் விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்துவிட்டு மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்த அவரை பின்னால் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை! மேற்குவங்கத்தில் பரபரப்பு
சத்யஜித் பிஸ்வாஸ்
  • News18
  • Last Updated: February 10, 2019, 9:21 AM IST
  • Share this:
மேற்கு வங்கத்தில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்யஜித் பிஸ்வாஸ். இவர் புல்பாரி என்ற இடத்தில் நடந்த தனியார் அமைப்பின் சரஸ்வதி பூஜை விழாவில் நேற்று பங்கேற்றார். மெழுகுவர்த்தி மூலம் விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்துவிட்டு மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்த அவரை பின்னால் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

அதில் குண்டுபாய்ந்த சத்யஜித் பிஸ்வாஸ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார். அதைப்பார்த்த கூட்டத்தினர் அலறியடித்து ஓடியபோது துப்பாக்கியால் சுட்டவரும் கூட்டத்தோடு, கூட்டமாக ஓடித் தப்பினார். துப்பாக்கிச் சூட்டிற்கு சற்று முன்னதாகவே அங்கிருந்து சென்றதால் அமைச்சர் ரத்னகோஷ் உயிர் தப்பினார். சம்பவஇடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றினர். எம்.எல்.ஏ கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக நாடியா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


கொல்லப்பட்ட சத்யஜித் பிஸ்வாசிற்கு அண்மையில்தான் திருமணம் நடந்திருந்தது. இந்நிலையில் எம்எல்ஏவின் கொலைக்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என நாடியா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் கவுரிசங்கர் தத்தா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் அதனை மறுத்துள்ளார். பாஜக சார்பில் சத்யஜித் பிஸ்வாஸ் மறைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏவின் கொலை வழக்கு சிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Also see:

First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்