இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் - சதீஷ் ரெட்டி

இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் - சதீஷ் ரெட்டி

ராணுவ தளவாடங்கள்

இறக்குமதி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களை நம்பி இருப்பதை குறைக்க இந்தியா விரும்புகிறது.

 • Share this:
  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) , இணைய வழியில் கருத்தரங்கை நடத்தியது. அதில் ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி பேசுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றார்.

  இது குறித்து அவர் பேசுகையில், “அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில், இந்திய பாதுகாப்பு படைகள் ஏராளமான உள்நாட்டு தளவாடங்களை கொண்டிருக்கும். இவற்றை மிக பெரிய அளவில் இந்தியா ஏற்றுமதி செய்யும்.

  எங்களின் ஒவ்வொரு திட்டத்திலும், தொழில் துறையில் இருந்து வளர்ச்சி மற்றும் உற்பத்தி பங்குதாரரை நாங்கள் அழைத்திருக்கிறோம். ஏவுகணை போன்ற முக்கியமான அமைப்புகளில்கூட தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... 100 கி.மீ தொலைவு இலக்குகளை தாக்கும் உள்நாட்டு தயாரிப்பு Hawk-i விமானம் சோதனை வெற்றி

  ஒரு நாடு உண்மையான சுயசார்பு நாடு என்று சொல்ல வேண்டுமானால், பாதுகாப்பு படைகளுக்கு தேவையான அதிநவீன தளவாட அமைப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி உள்நாட்டிற்குள் செய்யப்படும் போதுதான் அது சாத்தியமாகும்.

  இந்தியா உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடுகளில் ஒன்று. ஆயுதப்படைகள் அடுத்த 5 ஆண்டுகளில் ஆயுதங்கள் கொள்முதலுக்காக 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.10 லட்சம் கோடி) செலவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களை நம்பி இருப்பதை குறைக்க விரும்புகிறது.

  இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தியில் 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.75 லட்சம் கோடி) அடுத்த 5 ஆண்டுகளில் விற்றுமுதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) ராணுவ தளவாட ஏற்றுமதி இலக்கும் அடங்கும். என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: