சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் தண்டனை காலம் முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில், கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதனால், சசிகலா 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில். சசிகலாவின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நிலை சீராக இருப்பதால், ஐசியு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.... சசிகலாவிற்கு சர்க்கரை அளவு அதிகரிப்பு, இன்சுலின் வழங்கப்பட்டது - மருத்துவமனை அறிக்கை
இதற்கிடையில், சசிகலா 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்பதை கர்நாடக சிறைத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. சிறையில் சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்தது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை குடியரசு தின பொது விடுமுறை என்பதால் இன்றைக்கே அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.