பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ்.. ஒரு வார காலத்துக்கு வீட்டுத் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை..

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ்.. ஒரு வார காலத்துக்கு வீட்டுத் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை..

சசிகலா

பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட கொரோனா நெறிமுறை விதிகளின்படி சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

 • Share this:
  சொத்துகுவிப்பு வழக்கில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேசி சசிகலா உள்ளிட்ட மூவர் பெங்களூருவிலுள்ள பரப்பன அக்கரகார சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து, சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முன்னதாகவே சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு பெங்களூருவிலுள்ள பவரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் மூன்று தினங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

  முன்னதாக, சசிகலா விடுதலை செய்யப்பட்ட ஜனவரி 27-ம் தேதி விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின்படி, கொரோனா அறிகுறியில்லாமல் தொடர்ந்து 10 நாள்களும், 3 நாள்கள் செயற்கை சுவாசம் உதவி இல்லாமலும் இருந்தால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். அந்த முறையே சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கும் பின்பற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில், சசிகலா மூன்று தினங்களாக செயற்கை சுவாச உதவியின்றிதான் இருக்கிறார். எனவே, இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, இன்று காலை 12 மணிக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் சசிகலா பெங்களூரு அல்லது ஹைதராபாத்தில் தங்குவார் என கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி மாதம் 4, 5 ம் தேதிகளில் அஷ்டமி, நவமி வருவதால் அன்றைய தினங்களில் சென்னை வரவாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எனவே பிப்ரவரி 3ம் தேதி அல்லது 8ம் தேதிகளில் சென்னை வர வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க... ஆள், வேல் பிடித்தாலும் திமுக ஆட்சிகு வர முடியாது: ஓபிஎஸ்

  மேலும் சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்று கூடி வரவேற்போம் என்றும் நேற்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதற்கிடையில், சசிகலா விடுதலையை வரவேற்று தஞ்சாவூர், திருச்சி, தேனி என பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: