ஆக்சிஜன் அளவு குறைந்தது: சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ஆக்சிஜன் அளவு குறைந்தது: சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சசிகலா

சசிகலாவிற்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

 • Share this:
  இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கும் நிலையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செலுத்தி அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைவடைய உள்ளது. அவர் வருகிற 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

  இந்நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு முதல் கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையின் தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

  மேலும் படிக்க.... திடீர் மூச்சுத் திணறல்: சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை

  அங்கு சசிகலாவிற்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருந்தது. எனினும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும், இதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. எனவே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  இதனால், சசிகலா அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விடுதலை ஆக இருந்த நிலையில் சசிகலாவிற்கு உடல்நலம் பாதிப்படைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Suresh V
  First published: