• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை

பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை

இளவரசி

இளவரசி

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்ததையடுத்து சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை ஆகிறார்.

  • Share this:
    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து, சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை ஆகிறார். சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இந்நிலையில், இளவரசிக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை அவர் ஏற்கெனவே செலுத்தியிருந்தார்.

    மேலும் படிக்க...முதலமைச்சர் வேட்பாளர் யார்? - நாராயணசாமி பதில்...

    தண்டனைக் காலம் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். இதனிடையே சுதாகரனின் தண்டனை காலம் முடிந்து விட்டநிலையில், இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளதால் அவர் விடுதலை செய்யப்படுவது தள்ளிப்போகிறது.

    கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி 2ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் தனிமையில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: