முகப்பு /செய்தி /இந்தியா / உயிரை காப்பாற்றிய இளைஞர்.. நண்பனாகவே மாறிப்போன நாரை.. நெகிழ்ச்சியான ஃபிரன்ஷிப் கதை!

உயிரை காப்பாற்றிய இளைஞர்.. நண்பனாகவே மாறிப்போன நாரை.. நெகிழ்ச்சியான ஃபிரன்ஷிப் கதை!

நாரையுடன் இளைஞர் ஆரிப்

நாரையுடன் இளைஞர் ஆரிப்

நாரை பறந்து செல்லாமல் ஆரிப் வீட்டிலேயே இருந்திருக்கிறது. இதனையடுத்து நாரையை ஆரிப் தனது குடும்ப உறுப்பினராக வளர்த்து வந்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உத்தரப் பிரசேம் அமேதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். இவருடன் நாரை ஒன்று நெருக்கமாக பழகி வந்திருக்கிறது. இவர் பைக்கில் எங்கு சென்றாலும் நாரையும் பின் தொடர்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முகமது ஆரிப் சாலை ஓரத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாரையைக் காப்பாற்றி மருத்துவ சிகிச்சை அளித்திருக்கிறார். பின்னர் வீட்டுக்கு எடுத்து சென்று உணவளித்து வளர்த்து வந்திருக்கிறார்.

பின்னர் நாரைக்கு குணமானதும் அதனை பறக்கவிட்டிருக்கிறார். ஆனால் நாரை பறந்து செல்லாமல் ஆரிப் வீட்டிலேயே இருந்திருக்கிறது. இதனையடுத்து நாரையை ஆரிப் தனது குடும்ப உறுப்பினராக வளர்த்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆரிப்புக்கும் நாரைக்கும் பாசப்பிணைப்பு அதிகமாகியுள்ளது. அதன் பிறகு ஆரிப் எங்கு சென்றாலும் நாரையும் பின் தொடர்ந்து செல்லுமாம். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரிப் பைக்கில் செல்ல, நாரை பின் தொடர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவருகிறது.

First published:

Tags: Uttar pradesh