முகப்பு /செய்தி /இந்தியா / ’இவ்வளவு நேர்மையா...’ திருடிய சேலைகளை திருப்பித் தந்த திருட்டு கும்பல்... கடை உரிமையாளர் செய்த அந்த காரியம்..!

’இவ்வளவு நேர்மையா...’ திருடிய சேலைகளை திருப்பித் தந்த திருட்டு கும்பல்... கடை உரிமையாளர் செய்த அந்த காரியம்..!

வைரலான சிசிடிவி காட்சிகள்

வைரலான சிசிடிவி காட்சிகள்

ஐதராபாத் நகரில் உள்ள கடை ஒன்றில் சேலை திருடியவர்கள் மீண்டும் கடை உரிமையாளர்களை தொடர்பு கொண்டு திருடியதை திருப்பி கொடுத்த சுவாரஸ்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா பகுதியில் உள்ள தேஜா சைரீஸ் என்ற துணிக்கடை உள்ளது. இங்கு கடந்த வாரம்  5 பெண்கள், ஒரு ஆண் என  6 பேர்  வாடிக்கையாளர்கள் போல வந்துள்ளனர்.  அங்கிருந்த ஊழியர்களை துணி எடுத்து தர சொல்லி கேட்பது போல போக்கு காட்டி, சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 புடவைகளை பதுக்கி வைத்து திருடினர்.

கடைக்குள் நுழைந்த 15 நிமிடங்களுக்குள் இந்த பலே கைவரிசையை நிகழ்த்திவிட்டு, ஏதும் வாங்காமல் வெளியேறியுள்ளனர். இருப்பினும் அந்த 6 பேரின் நடவடிக்கைகள் கடை உரிமையாளர் நாக தேஜா பவுலூரிக்கு சந்தேகதை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது தான் உண்மை அம்பலானது. ஷாக் ஆன உரியமையாளர் காவல்துறையிடம் சிசிடிவி காட்சிகள் ஆதராத்தை காட்டி புகார் அளித்துள்ளார். ஏற்கனவே இந்த மோசடி கும்பல் மீது சில புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

உரிமையாளர் அத்தோடு நிற்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி வீடியோக்களை பதிவேற்றம்  செய்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது. இது திருட்டு கும்பலின் பார்வைக்கும் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று காலை கடை உரிமையாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்களை மன்னித்து விடுங்கள் பொருள்களை திருப்பி தந்து விடுகிறோம்.




 




View this post on Instagram





 

A post shared by Teja Sarees®️ (@tejasarees)



வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். எங்கள் குழந்தைகள் இதை பார்த்தால் மானம் போய்விடும் என்றுள்ளார். மேலும், வீடியோக்களை நீக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!

பின்னர் சிறிது நேரத்திற்குப் பின் அந்த பெண்ணே மீண்டும் தொடர்பு கொண்டு, புடைகளை செக்யூரிட்டி அருகே வைத்துவிட்டு சென்றுள்ளேன் எனக் கூறியுள்ளார். அங்கு அவர்கள் புடவைகளை வைத்து விட்டு யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகியுள்ளனர். இருப்பினும் அவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் வரை புகரை வாபஸ் பெற மாட்டேன் என கடை உரிமையாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

First published:

Tags: CCTV, Hyderabad, Instagram, Sarees, Theft