Home /News /national /

சரஸ்வதி தேவி யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.. ஹிஜாப் விவகாரத்தில் ராகுல் காந்தி பளார்!!

சரஸ்வதி தேவி யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.. ஹிஜாப் விவகாரத்தில் ராகுல் காந்தி பளார்!!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Hijab Row | மாணவிகள் பர்தா அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கர்நாடகா பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சரஸ்வதி தேவி யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. எனினும், மாணவிகள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பர்தா அணிந்தே பள்ளிக்கு வருவோம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

    இந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் மாணவர்களில் 100 பேர் காவித்துண்டுடன் பள்ளிக்குள் வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Also read: சென்னை ஆழ்கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள்!!

    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரலாம், ஆனால் வகுப்பறையில் பர்தா அணியக்கூடாது என்று தெரிவித்தார். தற்போது இந்த உடை சர்ச்சை கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது.

    இந்த பிரச்சினை தீராமல் தொடர்ந்து நீடித்து வருவதற்கு மத்தியில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அரக ஞானேந்திரா, பள்ளிக்கூடங்களில் சர்ச்சைக்கு இடமளிக்கக் கூடாது. மத விஷயங்கள் விசாலமான மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் சீருடை தான் முக்கியம். அங்கு மற்ற உடைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. அதாவது மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது.

    இதையும் படிங்க: “கோமியம் குடிச்சிட்டு தயாரா இருங்க!” ட்விட்டரில் பதிவிட்டு நாடாளுமன்றத்தில் தெறிக்க விட்ட திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா

    கல்வி கூடங்களில் சாதி, மதத்தை தாண்டி அனைவரும் ஒன்றே என்ற மனநிலை அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். பூஜைகள், பிரார்த்தனைகள் கோவில்கள், மசூதிகளில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்வி கூடங்களில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்து பேச வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணவிகள் பர்தா அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில், சரஸ்வதி தேவி யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி கூறியதாவது, ஹிஜாப் அணிவதை எல்லாம் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக உள்ளாக்குவதன் மூலம், இந்தியாவின் மகள்களின் எதிர்காலத்தை நாம் சூறயாடுகிறோம்.

    சரஸ்வதி தேவி அனைவருக்கும் அறிவை வழங்குகிறார். அவர் யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Dress code, Karnataka, Rahul gandhi, School

    அடுத்த செய்தி