Sanjeevani தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தியா தடுப்பூசி பெற உதவுகிறது...!

சஞ்சீவனி

தடுப்பூசி போடுவதற்கு இருக்கும் தயக்கத்தை குறைத்து, கடிமான இடங்களில் இருக்கும் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி கிடைக்க வசதி செய்து தருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    Sanjeevani தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தியாவில் உள்ள அனைவரும் தடுப்பூசி பெற உதவுகிறது.

    இந்த பிரச்சாரத்தின் நோக்கம் தடுப்பூசி போடுவதற்கு இருக்கும் தயக்கத்தை குறைத்து, தடுப்பூசி மையங்களை  பலப்படுத்தி எட்டுவதற்கு கடிமான இடங்களில் இருக்கும் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி கிடைக்க வசதி செய்து தருகிறது. கோவிட் 19 தொற்று 187 மில்லியனிற்கும் மேற்பட்ட உறுதி செய்த நோயாளிகளுடன் மற்றும் 4 மில்லியன் இறப்பை இதுவரை கொடுத்து  உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியாவில் 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு 4.1 மில்லியன் மக்கள் அவர்கள் வாழ்வை இழந்து அதிகபச்ச கேஸுகள் கொண்டு உலகில்  இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகம் இந்த கோவிட் -19 -ற்கு மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கையில், இந்த கொடிய நோயில் இருந்து அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்ற ஒரு நம்பிக்கையாக தடுப்பூசி வந்து உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியா அதன் தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டு தடுப்பூசி நிர்வாகத்தில் உலக பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. டோஸுகளின் எண்ணிக்கை அதிகமா இருப்பினும், இந்தியாவின் மக்கள் தொகையை அதாவது 1.38 பில்லியனை கணக்கில் கொண்டால், வெறும் 22.3% மக்கள் மட்டுமே முதல் டோஸ் பெற்றுள்ளனர் மற்றும் 5.52% மக்கள் இரண்டு டோஸுகளும் பெற்றுள்ளனர்.

    இந்த அதிக எண்ணிக்கைகளும் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மும்பை மற்றும் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இருந்து தான் வந்து உள்ளது மேலும் தடுப்பூசி நாட்டின் 65% மான ஊரக மற்றும் மலைவாழ் மக்கள் தொகைக்கு இன்னும் குறைவே.  தடுப்பூசியின் மெதுவான  முன்னேற்றத்திற்கு  பல காரணிகள் உண்டு அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி போடுவதற்கு தயக்கம்.

    இந்த கோவிட் - 19 தடுப்பூசிக்கு பல தரப்பட்ட தளங்கள் உள்ளனன் ஆனால் இன்னும் தடுப்பூசி பற்றிய உறுதி செய்யப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் புரளிகள் மக்கள் மத்தியில் உள்ளது. தொழில் நுட்ப வளங்கள் மற்றும் கல்வி போதியது இல்லாத நிலையில் சரியான தகவல்கள் மக்களுக்கு சென்றதா என்பதை உறுதி செய்ய, Federal(ஃபெடரல்) வங்கி Network 18(நெட்ஒர்க் 18) உடன் இணைந்து  United Way Mumbai ( யுனைடெட் வே மும்பை) மற்றும் அப்போல்லோ மருத்துவமனைகள் ப்ராஜெக்ட்  Sanjeevani: எ ஷாட் ஆப் லைப் என அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த திட்டம் தடுப்பூசி போட இருக்கும் தயக்கத்தை குறைத்து, தடுப்பூசி மையங்களை பலப்படுத்தி, எட்டுவதற்கு கடிமான இடங்களில் இருக்கும் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி கிடைக்க வசதி செய்து தருவதே இதன் நோக்கம். இந்த திட்டம் தற்போது நாட்டில் அம்ரித்சர், தக்ஷின் கன்னடா, குண்டூர், இந்தோர் மற்றும் நாசிக் போன்ற 5 மாவட்டங்களில் செய்யப்பட்டு 1000 கிராமங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களை குறிவைத்து உள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி 2021 அன்று, உலக சுகாதார தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரச்சாரம் இன்றைய தேதி வரை மேலும் 2 லட்ச மக்களை பல செயல்பாடுகள் மூலம் பெரும் விழிப்புணர்வு மற்றும் தனித்தனி சந்தேகத்தை தீர்த்து உள்ளது.

    10735 மக்கள் தடுப்பூசி போட கோவின் போர்ட்டலில் இதுவரை பதிவு செய்ய உதவி செய்து உள்ளனர் மற்றும் 4304  போக்குவரத்து வசதிகள் மக்களை தடுப்பூசி மையங்களுக்கு கூட்டி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது இந்த குழு கடை நிலையில் வேலை செய்து மக்களுக்கு தடுப்பூசி போட உதவி செய்கிறது, மேலும் தொழில் நுட்பம் இல்லாத இடங்களிலும் இந்த தடுப்பூசி போடுவதற்கான தயக்கம் உள்ளது.  தவறான தகவல்கள் நிறைய மக்களை எங்கள் குழுவிடம் கலந்துரையாட தயக்கம் உருவாக்கி தடுப்பூசி போட மறுக்க வைக்கிறது.

    இந்த பிரச்சாரம் செயல்பட தொடங்கியவுடன், பல வெற்றி கதைகள் உருவானது மேலும் ஒரு முக்கிய அனுபவமாக சரியான தகவல் பரிமாற்றமே தடுப்பூசி தயக்கத்தை குறைக்க முக்கிய காரணமாக உள்ளது புரிந்தது. பல இடங்களில் உள்ள மக்கள் உண்மைகளை புரிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே குழுவுடன் கலந்துரையாடல் இருக்கிறது. இந்த குழுவிற்கு மேலும் அங்கன்வாடி சேவகிகள், ஆஷா வேலையாட்கள் போன்ற  பல அரசாங்க சேவைகளும் பெரும் உதவி புரிந்து இந்த பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியத்துவத்தை அறிந்து உள்ளனர்.

    Also read... இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி

    Sanjeevani- எ ஷாட் ஆப் லைப் இந்த தேசிய நிகழ்ச்சிகள் போது தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தில் அழுத்தம் கொடுத்து உள்ளது மேலும் மக்களில் கேள்விகளுக்கு பதில் கூறும் ஒரு ஆள் நேரில் தேவை மற்றும் அவர்கள் தவறான தகவல்களுக்கு இரை ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.   தடுப்பூசி தயக்கத்தை குறைத்துக் கொண்டு இருக்கையில் மற்றும் தேவையான தடுப்பூசி ஜாப்புகளை செய்து கொடுக்கையில், தடுப்பூசி மையங்கள் வரும் கூட்டத்தை நிர்வகித்து தொற்றின் மூலமாக இருக்காமல் இருக்க அதன் அமைப்புகளை மாற்றுவது மிக முக்கியம். இதனை செய்ய, அந்த மையங்களில்  சுத்தம், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை அத்தியாவசியம்.

    Sanjeevani பிரச்சாரம் அந்த கோணத்தில் வேலை செய்து, 5 மாவட்டங்களில் 100 மையங்களுக்கு ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் பாதுகாப்புக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொடுக்கப்பட்டது. இன்றுடன், தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் 18 மையங்களில் முக கவசங்கள், கிருமி நாசினிகள், சானிடைசர்கள், சுத்தம் செய்யும் உபகரணங்கள் மற்றும் பல கொடுத்து உள்ளது.   இந்த பிரச்சார செயல்பாடுகள் பொழுது, பல நேர்மறை கதைகள் பல வந்த வண்ணம் உள்ளது இது கோவிட் தடுப்பூசிக்கு எதிரான எண்ணங்களை குறைக்க உதவியாக உள்ளது. அதில் அம்ரித்சரில் உள்ள பல்லறவால் கிராமத்தில் இருந்து வந்த கதையில் ஜஸ்கரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அவர்கள் சமூகத்தின் மூலமாக தடுப்பூசி போடாமல் இருக்க வற்புறுத்தப்பட்டனர் மற்றும் கடை மட்ட குழுவுடனும் தொடர்பு கொள்ள கூடாது என கட்டளையிடப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் அஅவர்களின் உடன் இருப்பவர்களை எதிர்த்து ஊசி போட்டுக் கொண்டனர். ஜஸ்கரன் ஒரு எடுத்துக்காட்டாக நிற்கிறார் மேலும் மீதம் உள்ள சமூகத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களை நினைத்து குழு பெருமை படுகிறது. மற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளூர் பங்குதாரர்கள் எவ்வாறு மக்களின் மனதை மாற்றும் என்பதை குறிக்கும். ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து விஜய ராணி, ஆஷா சேவகி 8 வருட அனுபவம் கொண்டவர். அவர் Sanjeevani குழுவிற்கு பெரும் உதவி புரிந்து ஒரு உத்வேகமாக இருந்தார், அவர் Sanjeevani வண்டிக்கு உதவி, தடுப்பூசிக்கு எதிராக இருந்த கிராம மக்களின் மனதை மாற்றினார். அவர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஆஷா குழுக்களுடன் சேர்ந்து அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அடுத்த படிகளாக, இந்த பிரச்சாரம் பல பல உள்ளூர் பங்குதாரர்களை இணைத்து கொண்டு  மேலும் தீவிர படுத்த உள்ளது, இந்த முகாம் பெரியதாக விரிவடைகிறது. இந்த குழு மேலும் பல மக்களை கோவிட் தடுப்பூசி போட அழைத்து வந்து மேலும் இனி வரும் மூன்றாவது தொற்று அலையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் நோக்கத்தில் உள்ளது. பல தடுப்பூசி மையங்கள் பலப்படுத்தப்பட்டு இன்னும் பல மக்களுக்கு வழிவகுக்கும் மேலும் இறுதி நோக்கமான மாவட்டங்களில் முழு தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றும்.
    Published by:Vinothini Aandisamy
    First published: