கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு: சஞ்சீவனி இயக்கத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு!

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் ‘Sanjeevani – A Shot of Life’ பிரச்சார இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டியுள்ளார்.

  • Share this:
அடித்தட்டு, கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கி அவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமானது உலக சுகாதார தினமான இன்று (ஏப்ரல் 7) தொடங்கப்பட்டுள்ளது. சஞ்சீவனி பிரச்சார இயக்கத்தை நெட்வொர்க் 18 மற்றும் அப்போலோ 24/7 மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்துகிறது. இது பெடரல் வங்கியின் பெருநிறுவன சமுதாய பொறுப்பு (corporate social responsibility) நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சோனு சூட், எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ராணுவ வீரர்கள் சல்யூட் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அடித்தட்டு, கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கி அவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமானது உலக சுகாதார தினமான இன்று (ஏப்ரல் 7) தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே சஞ்சீவனி கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்திற்கு மத்திய சுகாதார் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். “நெட்வொர்க் 18, பெடரல் வங்கி இணைந்து நடத்தும் இந்த பிரச்சார இயக்கத்தை கண்டு மகிழ்கிறேன், இதற்கு சஞ்சீவனி என பெயர் சூட்டியுள்ளீர்கள்... நோயாளிகளுடன் களத்தில் செயலாற்றும் கொரோனா முன்கள வீரர்களுக்கு சளைத்தவர்கள் ஊடகத்தினர் கிடையாது என நான் முன்னதாகவே கூறியிருக்கிறேன். தடுப்பூசி திட்டத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றியமைத்த உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன்” என ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் இதுவரை 8 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

ராமாயணத்தில் உயிர் காக்கும் சஞ்சீவி மூலிகையை கொண்டுருவந்து லட்சுமணின் உயிரை காப்பதற்காக அனுமான் இமயமலையில் இருந்து பல மைல் தூரத்திற்கு சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கிக் கொண்டுவந்தார். ஆனால் நாங்கள் சஞ்சீவி மூலிகை போன்ற உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசிகளை அரசு, தனியார் மருத்துவமனைகள் என நாட்டின் பல மையங்களில் உங்களுக்கு கிடைக்கச் செய்துள்ளோம் என ஹர்ஷ்வர்தன் கூறினார்.
Published by:Arun
First published: