முகப்பு /செய்தி /இந்தியா / சிவசேனா சின்னத்துக்காக கைமாறிய ரூ.2000 கோடி.. ஒரு எம்.எல்.ஏ-வின் விலை ரூ.40 கோடி - சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு

சிவசேனா சின்னத்துக்காக கைமாறிய ரூ.2000 கோடி.. ஒரு எம்.எல்.ஏ-வின் விலை ரூ.40 கோடி - சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு

சஞ்சய் ராவத் -ஏக்நாத் ஷிண்டே

சஞ்சய் ராவத் -ஏக்நாத் ஷிண்டே

Sivasena Party Symbol | ஒரு எம்.எல்.ஏவுக்கு 40 கோடி ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

வில் அம்பு சின்னத்தை பெற 2 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக உத்தவ் தாக்கரே அணி குற்றம்சாட்டியதை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்துள்ளது.

சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பெற ஏக்னாத் ஷிண்டே தரப்பு 2 ஆயிரம் கோடி கொடுத்ததாக கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த நிலையில், ஏக்னாத் ஷிண்டே தரப்பு கட்சியின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே ஆதரவாளரும், எம்பியுமான சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏக்னாத் ஷிண்டேவால் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏவுக்கு 40 கோடி ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது 100 சதவீதம் உண்மை எனவும், இது தொடர்பாக விரைவில் ஆதாரத்தை வெளியிட இருப்பதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனவும், ஏக்னாத் ஷிண்டே அணியை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் எனவும் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பு, சஞ்சய் ராவத் தங்களுக்கு காசாளராக செயல்பட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளது.

First published:

Tags: Maharastra, Shiv Sena