காங்கிரஸால் எங்களுக்கு அரசியல் அழுத்தம் இல்லை - சிவசேனா எம்.பி விளக்கம்

காங்கிரஸால் எங்களுக்கு அரசியல் அழுத்தம் இல்லை - சிவசேனா எம்.பி விளக்கம்

சஞ்சய் ராவத்

காங்கிரஸ் கட்சியால் எங்களுக்கு அரசியல் அழுத்தம் இல்லை என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், ‘தங்கள் தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உயிர்ப்போடு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதன்படி அரசாங்க ஒப்பந்தங்களில், எஸ்சி / எஸ்டி தொழில் வல்லுநர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அவர்களிடையே தொழில்முனைவோரைத் தங்கள் அரசு மேம்படுத்த வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் வளர்ச்சிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மக்கள்தொகையில் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைமைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து பேசிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. தற்போதைய மகா விகாஷ் அகாடி கூட்டணி அமைவதில் சோனியா காந்தியின் பங்கும், சரத் பவாரின் பங்கும் முக்கியமானது. கூட்டணி அமைக்கும்போது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வடிவமைத்தோம். அதுகுறித்ததுதான் சோனியா காந்தியின் கடிதம். கொரோனா பாதிப்பின் காரணமாக குறைந்தபட்ச செயல்திட்ட பணிகள் செயப்பட முடியாமல் போனது.

  கொரோனா பாதிப்பு அதிகரித்ததான் காரணமாக சில திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மகாராஷ்டிரா மக்களின் நலம் மற்றும் மாநிலத்தின் நலன் மீதுள்ள அக்கறையின் காரணமாக காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருக்கலாம். இது வரவேற்கக் கூடியது. இங்கே அரசியல் அழுத்தம் இல்லை. நாங்கள், காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: