Home /News /national /

ஒரு நாடு ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துங்கள் - அமித் ஷாவுக்கு சஞ்சய் ராவத் சவால்

ஒரு நாடு ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துங்கள் - அமித் ஷாவுக்கு சஞ்சய் ராவத் சவால்

கோப்பு படம்

கோப்பு படம்

ஒரு நாடு, ஒரு அரசியல் சட்டம், ஒரு தேசிய சின்னம் என்பது போல இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி தேவை என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    சிவசேனா செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் நேற்று நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசுகையில், இந்தி மொழி திணிப்பு குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், இந்தி பேசுபவர்கள் ஏன் தமிழ்நாட்டில் பானி பூரி விற்கிறார்கள் என பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், 'எனது கட்சி எப்போதும் இந்திக்கு மதிப்பளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நான் இந்தியில் தான் பேசுகிறேன். காரணம் நான் பேசுவதை நாட்டு மக்கள் கேட்க வேண்டும். இந்தி மொழி தான் நாடு முழுவதும் ஏற்கப்பட்டு பேசப்படுகிறது. இந்தி நடிகர்களுக்கு உலக அரங்கில் மதிப்பு உள்ளது. எனவே எந்த மொழியையும் நாம் அவமதிக்கக் கூடாது.

    எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் ஒரு சாவல் தருகிறேன். ஒரு நாடு, ஒரு அரசியல் சட்டம், ஒரு தேசிய சின்னம் என்பது போல ஒரு தேசிய மொழி தேவை. எனவே இந்தியை தேசிய மொழியாக அமித் ஷா அறிவிக்கட்டும்' என சவால் விடுத்துள்ளார். இந்தியாவில் அந்நிய மொழியான ஆங்கிலம் மொழிக்கு ஏற்பு கிடைத்துள்ளது. அதை விட, இந்தியா முழுவதற்குமான மொழியாக இந்தி இருக்க வேண்டும். வேறு பிராந்திய மொழிகள் இருப்பது சாத்தியமில்லை என மத்திய உள்துறை அமித் ஷா கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்திய ரயில்வே

    அமித் ஷாவின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் அமித் ஷா கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Imposing Hindi, Shiv Sena

    அடுத்த செய்தி