முகப்பு /செய்தி /இந்தியா / சனாதன தர்மம்தான் நமது தேசிய மதம் - உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!

சனாதன தர்மம்தான் நமது தேசிய மதம் - உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

சனதான தர்மம் நமது தேசிய மதமாகும். நாம் சாதி, சுயநலன்களைத் தாண்டி தேசிய மதத்தில் ஒன்றிணைய வேண்டும் என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் அயோத்தியில் 2019 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2024ஆம் ஆண்டிற்குள் அங்கு ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமை அடைந்து, கோயில் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் மாவட்டத்தில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று, புதிய விக்ரகம் நிர்மாணம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சனாதன தர்மம் தான் இந்தியாவின் தேசிய தர்மம் என்று பேசினார். யோகி ஆதித்யநாத் கூறுகையில், "முந்தைய காலத்தில் நமது மத வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தால், அதை மீண்டும் புனரமைத்துக் கட்ட வேண்டியது அவசியம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 500 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடியின் முயற்சியால் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெறுகிறது.

இந்த ராமர் கோயில் கட்டுமானத்தில் பங்களிப்பு செய்த அனைத்து பக்தர்களும் தேசிய உணர்வை பிரதிபலிக்கின்றனர். சனாதன தர்மம் நமது தேசிய மதமாகும். நாம் சாதி, சுயநலன்களைத் தாண்டி தேசிய மதத்தில் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நீலகண்ட மகாதேவர் கோயில் 1400 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்படுவதே நமது பாரம்பரியத்தை மதித்து பாதுகாப்பதற்கு சிறந்த உதாரணம்" எனக் கூறினார்.

First published:

Tags: Ayodhya Ram Temple, Yogi adityanath