• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆரியன் கானை விடுவிக்க பேரம் பேசியதாக சர்ச்சை: NCB அதிகாரி சமீர் வான்கடே நீதிமன்றத்தில் மனு:

ஆரியன் கானை விடுவிக்க பேரம் பேசியதாக சர்ச்சை: NCB அதிகாரி சமீர் வான்கடே நீதிமன்றத்தில் மனு:

சமீர் வான்கடே

சமீர் வான்கடே

NCB மண்டல அதிகாரியான சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் ஆரியன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாக இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள  பிரபாகர் செயில் என்பவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • Share this:
    ஷாருக்கான் மகன் ஆரியன் கானை போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே லஞ்சம் கேட்டதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க மும்பை உயர் நீதிமன்றல் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சொகுசுப் கப்பலில் போதைப் பொருள் வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், உள்ளிட்டவர்களை போதைப் பொருள் தடுப்பு முகமையின் (NCB) மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில்,  சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் ஆரியன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாக இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள  பிரபாகர் செயில் என்பவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் நாவப் மாலிக் , சமீர் வான்கேட குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

    இதனிடையே, சமீர் வான்கடே மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. | மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  தனக்கு எதிரான புகார் மீது  சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். மேலும், “அவர்கள் என்னை கைது செய்தால், என் சட்டம் என்னை காப்பாற்றும். நான் போதைப்பொருள் வியாபாரி அல்ல. நான் ஒரு மண்டல பொறுப்பாளர்” என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: டாடா வசம் ஏர் இந்தியா சென்ற பின் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு


    என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது 4 வெவ்வேறு புகார்கள் இருப்பதாக மகாராஷ்டிர அரசு வழக்கறிஞர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதேபோல், சமீர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: