முகப்பு /செய்தி /இந்தியா / தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகார வழக்கு- 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றம்

தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகார வழக்கு- 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுய விருப்பத்துடன் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் படி தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஓர்பால் உறவு குற்றமல்ல என்று சட்டப்பிரிவு 377-யை ரத்து செய்தது. இருப்பினும், தன்பாலினத் திருமணத்துக்கு இந்தியாவில் அங்கீகாரம் அளிக்கப்படாமல் இருந்துவருகிறது.

இந்தநிலையில், தன்பாலினத் திருமணத்தை திருமணமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ’தன்பால் ஈர்ப்பு தம்பதிகள் திருமணம் செய்துகொள்ளும் செயல் இந்திய குடும்ப அமைப்புக்கு எதிராகவுள்ளது. அதற்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது.

”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக எம்பிகள்!

இந்தநிலையில், தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு தொடரப்பட்ட வழக்குகளை 5 உச்சு நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Supreme court