Home /News /national /

உ.பி. வாரணாசி தொகுதியில் சட்டவிரோதமாக EVM இயந்திரங்கள் மாற்றம்?- குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வீடியோவை பகிர்ந்த அகிலேஷ் யாதவ்

உ.பி. வாரணாசி தொகுதியில் சட்டவிரோதமாக EVM இயந்திரங்கள் மாற்றம்?- குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வீடியோவை பகிர்ந்த அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

உ.பி.யின் வாரணாசியில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக EVMகள் சட்டவிரோதமாக நகர்த்தப்பட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியதை அடுத்து, அவரது கட்சி ஒரு வீடியோவை ட்வீட் செய்தது, அதில் நெறிமுறையில் குறைபாடுகள் இருப்பதை ஒரு அதிகாரி ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

மேலும் படிக்கவும் ...
    உ.பி.யின் வாரணாசியில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக EVMகள் சட்டவிரோதமாக நகர்த்தப்பட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியதை அடுத்து, அவரது கட்சி ஒரு வீடியோவை ட்வீட் செய்தது, அதில் நெறிமுறையில் குறைபாடுகள் இருப்பதை ஒரு அதிகாரி ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முறைகேடாக மாற்றப்பட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார்.

    இந்த கூற்றை ஆதரித்து, சமாஜ்வாதிக் கட்சி புதன்கிழமை காலை ஒரு வீடியோவை ட்வீட் செய்தது, அதில் வாரணாசியின் கமிஷனர் தீபக் அகர்வால் செய்தியாளர்களிடம், EVMகளின் இயக்கத்தில் உண்மையில் ஒரு நெறிமுறை குறைபாடு இருப்பதாகக் கூறுவது போல் தெரிகிறது. எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்று தீபக் அகர்வால் அதில் கூறுவதும் பதிவாகியுள்ளது.

    தீபக் அகர்வால் கூறும்போது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நகர்த்துவதற்கான நெறிமுறை பற்றி கூற வேண்டுமெனில், நெறிமுறைகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல முடியாது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். மூன்று அடுக்குப் பாதுகாப்பு உள்ளது. அரசியல் கட்சித் தொண்டர்கள் கூட மையங்களுக்கு வெளியே அமர்ந்து கண்காணித்துக்கொள்ளலாம்.” என்றார்.

    சமாஜ்வாடி கட்சி தனது ட்வீட்டில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

    “இது யாருடைய விருப்பத்தின் பேரில் நடக்கிறது? முதல்வர் அலுவலகம் மூலம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? தேர்தல் கமிஷன், தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்” என்று சமாஜ் வாதிக் கட்சி சாடியுள்ளது.

    சமாஜ்வாதி தலைவர், வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் (DM) உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் கொடுக்காமல் EVM களை கொண்டு செல்கிறார் என்று குற்றம் சாட்டினார், மேலும் தேர்தல் ஆணையம் அதை கவனிக்குமாறு வலியுறுத்தினார்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த வழியில் கொண்டு செல்லப்பட்டால் நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது திருட்டு. நமது வாக்குகளை நாம் காப்பாற்ற வேண்டும். இதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்லலாம் ஆனால் அதற்கு முன், ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

    பாஜகவுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ள இடங்களில் வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் வழக்கம் போல் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்துள்ளது.

    உத்தரபிரதேச தேர்தல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Akilesh yadav, EVM Machine, UP, Uttar pradesh

    அடுத்த செய்தி