தாலிபான்கள் குறித்து பிரதிநிதி பேசியது வாரியத்தின் கருத்து அல்ல- அனைத்திந்திய தனிநபர் முஸ்லிம் சட்டவாரியம் விளக்கம்

தாலிபான்கள்

தாலிபான்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் மவுலானா சஜத் நவுமனி பேசிய கருத்துகள் வாரியத்தின் கருத்து இல்லை என்று மறுப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியதற்காக தாலிபான்களுக்கு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் தாலிபான்கள் நடத்தி வந்த உள்நாட்டு போர் என்பது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது. 20 ஆண்டுகளால அமெரிக்க படைகளையும் அவர்கள் எதிர்த்து போரிட்டு வந்த நிலையில் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது அமெரிக்கா. இதன் பின்னர் ஆப்கன் அரசுப் படைகளை எதிர்கொண்ட தலிபான்கள் வெறும் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். காபுலை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டே தப்பிச் சென்றார் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி.

Also Read: மலையாள தாலிபான்கள் – சந்தேகத்தை கிளப்பும் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர்!

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த போதிலும் பெரும்பாலான நாடுகள் தாலிபான்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. தாலிபான்கள் விஷயத்தில் இன்னும் குழப்பமான நிலையே நீடித்து வருகிறது.

இந்நிலையில் தாலிபான் அமைப்பினரை இந்திய முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதி ஒருவர் பாராட்டி பேசியுள்ளார்.

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரான மவுலானா சஜத் நவுமனி என்பவர் தாலிபான்களுக்கு சல்யூட் அடிப்பதாக தெரிவித்துள்ளார்.

Also Read:  இந்தியாவை பாராட்டிய தலிபான்கள்!

சஜத் நவுமனி கூறுகையில், “நிராயுதபாணியான தேசம் வலிமையான படைகளை தோற்கடித்தது. அவர்கள் காபூலின் அரண்மனைக்குள் நுழைந்தனர். அவர்களிடம் பெருமை அல்லது ஆணவம் இல்லை. அவர்களிடமிருந்து பெரிய உரைகள் இல்லை. அந்த இளைஞர்கள் காபூலின் மண்ணில் முத்தமிடுகிறார்கள். வாழ்த்துக்கள். தொலைதூரத்தில் இருக்கும் இந்த இந்தி முஸ்லிம் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். உங்கள் தைரியத்துக்கும், உங்கள் உத்வேகத்திற்கும் சல்யூட்” என அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சஜத் நவுமனியின் கருத்து அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்தின் கருத்தாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், ‘ஆஃப்கானிஸ்தானின் தற்போதைய சூழல் குறித்தோ அல்லது தாலிபான்கள் குறித்தோ அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. வாரிய உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துகளை வாரியத்தின் கருத்துகள் போல சில ஊடகங்கள் செய்தியாக்குகின்றன. வாரியத்தின் மீது தவறான எண்ணம் உருவாக்கப்படுகிறது. இந்தச் செயல்கள் இதழியலின் ஆன்மாவுக்கு எதிரானது. ஊடகங்கள் இத்தகைய செயல்களிலிலிருந்து விலகி இருக்க வேண்டும். தாலிபான்கள் தொடர்பான எந்தச் செய்திகளும் அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்தின் பெயரில் வரக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

Also Read: ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை – தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

முன்னதாக, தாலிபான்களை இந்திய சுதந்திர வீரர்களுடன் ஒப்பிட்டு சமாஜ்வாதி கட்சி எம்.பி ரஹ்மான் பர்க் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது தேசதுரோக பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அவர் மட்டுமல்லாது ஃபேஸ்புக்கில் தாலிபான்களை புகழ்ந்து பேசிய மேலும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே தாலிபான்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தான் ஒப்பிடவில்லை எனவும் என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் சமாஜ்வாதி கட்சி எம்.பி ரஹ்மான் பர்க் கூறியிருக்கிறார். நான் இந்திய குடிமகன் எனவும் ஆப்கானிஸ்தானியர் கிடையாது. எனவே அதனால் அங்கு நடப்பதை பற்றி எனக்கு தேவையில்லை. எனது அரசாங்கத்தின் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: