இந்திய விமானப்படை தாக்குதல்... தலைவர்கள் கருத்து...!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
- News18
- Last Updated: February 26, 2019, 11:44 AM IST
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு ‘சல்யூட்’ என்று பதிவிட்டுள்ளார்.
🇮🇳 I salute the pilots of the IAF. 🇮🇳
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2019
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இந்திய விமானப்படை வீரர்களால் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. உண்மையில் இந்தப் பகுதிகள் நமக்கு சொந்தமானவை.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எனவே நாம் நமது மண்ணில்தான் குண்டுவீசி இருக்கிறோம். இதில் தவறு இல்லை. நம் பகுதியை காக்க நாம் தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.
We are bombing our own territory temporarily called PoK. So no international law broken but it is in self defence
— Subramanian Swamy (@Swamy39) February 26, 2019
தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தக்க பதிலடி தந்துள்ளது. அமைதி மற்றும் உயிருக்கான மரியாதைக்காக ஒரு தாக்குதல் என்று கிரண் பேடி பதிவிட்டுள்ளார்.
India #Strikesback in its fight against terror. Watch #breakingnews
Time to close ranks. #IndiaFirst
A Strike for Peace and Respect for Life.
— Kiran Bedi (@thekiranbedi) February 26, 2019
"பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படையினரின் வீரம் நம்மை பெருமையடையச் செய்துள்ளது" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
I salute the bravery of Indian Air Force pilots who have made us proud by striking terror targets in Pakistan
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2019
"நள்ளிரவில் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ! புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி...தரமான சம்பவம்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
”IAF என்றால் India's Amazing Fighters என்றும் அர்த்தமாகியுள்ளது. ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
IAF also means India's Amazing Fighters. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) February 26, 2019
”பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்து வெற்றிகரமாக இந்தியப் படை திரும்பியுள்ளது. இந்திய நாயகர்களால் நாடு பெருமை அடைந்துள்ளது. அவர்களது வீரத்துக்குத் தலை வணங்குகிறேன்” என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Our 12 return safely home after wreaking havoc on terrorist camps in Pakistan. India is proud of its heroes. I salute their valour.
— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2019
.@IAF_MCC 👍🇮🇳#IndianAirForce pic.twitter.com/yGi2ZQygf3
— AAP (@AamAadmiParty) February 26, 2019
மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் தாக்குதலுக்கு "ஜெய் ஹிந்த்" என எழுதியுள்ளார்.
Jai Hind.
— Shashi Tharoor (@ShashiTharoor) February 26, 2019
Also See...