பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் வயிற்றில் ஈரத்துணி அணிந்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்

பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் வயிற்றில் ஈரத்துணி அணிந்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்

சம்பளம் வழங்கவில்லை எனப் புகார் - வயிற்றில் ஈரத்துணி அணிந்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்

சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி புதுவையில் வயிற்றில் ஈரத்துணி அணிந்து தொழிலாளர்கள் நூதன போராட்டம் மேற்கொண்டனர்.

  • Share this:
புதுச்சேரி அரசின் வேளாண் நிறுவனங்களான பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை காரணமாக நாளடைவில் நலிவுற்று வந்தது.

இதனை ஆட்சியாளர்கள் சரிசெய்யாமல் இந்நிறுவனத்தை முடக்கி, செயல்படாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் அங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.இவ்விகாரத்தில் அரசின்  போக்கை கண்டித்தும், இந்நிறுவனங்களை திறந்து நடத்த வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் கடந்த 10ம் தேதி முதல் சட்டமன்றம் முன்பு  தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். பிரச்னைகளைத் தீர்க்கும் வரை ஏஐடியுசி போராட்டம் நடத்தும் என தெரிவித்துள்ளது.

Also read: குடிப்பதற்கு பணமும், உணவும் தர மறுத்ததால் மனைவியுடன் தகராறு - கணவர் தீக்குளித்து தற்கொலை

3வது நாளான இன்று தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதித்து குடும்பம் பட்டினியில் வாடுவதைச் சுட்டிகாட்டும் வகையில் வயிற்றில் ஈரத்துணி அணிந்து நூதனப் போராட்டம் நடந்தது. தினமும் இப்போராட்டம் புதுபுது வடிவம் பெறும் என ஏஐடியுசி பொதுச்செயலாளர் சேது செல்வம் தெரிவித்துள்ளார்.
Published by:Rizwan
First published: