மும்பையில் ஒரு நிர்பயா ..டெம்போவில் பாலியல் வன்கொடுமை.. சிதைக்கப்பட்ட பிறப்புறுப்பு – மருத்துவமனையில் உயிரிழந்த பெண்

மும்பை பாலியல் வன்கொடுமை

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

  • Share this:
    மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா மரணத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். மும்பையில் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 மணிநேரம் மருத்துவமனையில் உயிருக்காக போராடிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    மும்பை கைராணி பகுதியில் செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலையில் பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் சாலையில் கிடப்பதாக  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவலர்கள் விரைந்தனர். சாலையின் ஓரத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்துள்ளார். அந்தப்பெண்ணை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    Also Read: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிச்சென்ற கொடூரம் - டிக் டாக் காதலன் கைது

    அந்தப்பெண்ணை பரிசோசித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்தப்பெண்ணுக்கு 35 வயது இருக்கும் எனக் கூறிய மருத்துவர்கள் அவர் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாகியிருப்பதாக கூறியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்த நபர் அந்தப்பெண்ணின் பிறப்புறப்பை சேதப்படுத்தியதாக கூறி அதிர்ச்சியளித்தனர். அந்தப்பெண் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    Also Read:  போதையில் மாடல் அழகி ரகளை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

    இதனையடுத்து அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது டெம்போ வாகனத்தில் இருந்து அந்தப்பெண்ணை தூக்கி எறியும் காட்சிகள் பதிவாகியிருந்தது.இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் பெயர் மோகன் சவான் (வயது 42) என்பது தெரியவந்தது.

    டெம்போ வேனில் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இரும்பு ராடு கொண்டு அவரை தாக்கியதும், பிறப்புறுப்பை சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அந்த டெம்போ முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. தடயவியல் நிபுணர்கள் டெம்போவை ஆய்வு செய்தனர். நடந்த சம்பவம் குறித்து அந்தப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற காவல்துறையினர் காத்திருந்த நிலையில் அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

    இந்தச்சம்பவம் தொடர்பாக பேசிய  வியாழக்கிழமை நள்ளிரவு – வெள்ளிக்கிழமை அதிகாலைக்கு இடைப்பட்ட வேளையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published: