தனியார் துறைகளை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது - மோடி பேச்சுக்கு தொழிலதிபர்கள் பாராட்டு

தனியார் துறைகளை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது - மோடி பேச்சுக்கு தொழிலதிபர்கள் பாராட்டு

பிரதமர் மோடி

தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின் வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த காலம் கடந்துவிட்டது. தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரம், போக்கை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

 • Share this:
  இன்று மனித சமூகத்துக்கு இந்தியா பயன்பட வேண்டுமென்றால் அதில் தனியார் துறைக்கே பெரும் பங்கு என்று பிரதமர் மோடி மக்களவையில் குறிப்பிட்டதை இந்திய தொழிலதிபர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி நேற்று மக்களவையில் விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர்

  “நாட்டில் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கு, கலாச்சாரம் தொடரந்து வருகிறது. நாட்டில் பொதுத்துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு தனியார் துறைக்குக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனியார் துறையின் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.

  குறிப்பாக தொலைத்தொடர்புத்துறையிலும், மருந்துத் துறையிலும் தனியார் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்கின்றன. ஏழை மக்கள் கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள், மொபைல் போன்கள் விலை கடும் போட்டி காரணமாக மக்கள்எளிதாக வாங்கும் வகையில் குறைந்துள்ளது.

  கரோனா வைரஸ் காலத்தில் இந்தியாவால் மனிதநேய உதவிகளை பல நாடுகளுக்கும் செய்ய முடிகிறது என்றால், அதற்கு தனியார் துறை, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் முடிகிறது.

  ஆதலால், தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின் வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த காலம் கடந்துவிட்டது. தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரம், போக்கை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. நமது இளைஞர்களையும் இவ்வாறு இழிவுபடுத்த முடியாது. மனித குலத்துக்கு இன்று இந்தியா ஏதேனும் வகையில் பயன்படும் என்றால் அதில் தனியார் துறைக்கே அதிக பங்கு” என்று பேசினார்.

  இது தொடர்பாக மகீந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹீந்திரா, “தொற்று நோய் காலக்கட்டத்தில் பிரதமரின் வார்த்தைகள் ஊக்குவிப்பாய் அமைந்துள்ளன. நாம் இப்போது நிர்வாகம் மற்றும் செயலில் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்பட வேண்டியது அவசியம்” என்று பாராட்டியுள்ளார்.

  ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத் தலைவர் சாஜன் ஜிண்டால், “இந்திய தொழிலதிபர்களுக்கு முதல் முறையாக ஒரு இந்தியப் பிரதமர் மரியாதை அளித்துப் பேசியுள்ளார். நாட்டிற்கு செல்வத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கிடும் தொழிலதிபர்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய உத்வேகமாகும் இது.” என்று பாராட்டிப் பேசியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: