ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழ்நாடு சாய்பாபா பக்தர்களுக்கு நற்செய்தி - மீண்டும் தொடங்குகிறது ஷீரடி ரயில்சேவை

தமிழ்நாடு சாய்பாபா பக்தர்களுக்கு நற்செய்தி - மீண்டும் தொடங்குகிறது ஷீரடி ரயில்சேவை

மாதிரி படம்

மாதிரி படம்

கோடை காலத்தில் சிறப்பு ரயில் சேவை மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை - ஷீரடி வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டிலும் சாய்பாபாவுக்கு அதிக பக்தர்கள் உள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து ஷீரடிக்குச் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சாய் நகர் ஷீரடி செல்லும் ரயில் சேவை வரும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பக்தர்களின் வசதிக்காக மீண்டும் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த வாராந்திர ரயில் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை 10.20க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.25க்கு ஷீரடி சென்றடையும்.

இதையும் படிங்க - ஹிஜாப், ஹலால் மட்டும் போதாது.. வளர்ச்சித் திட்டங்கள்தான் முக்கியம் - கர்நாடக முதல்வருக்கு கட்சி மேலிடம் உத்தரவு

 அதேபோல், ஷீரடியில் வெள்ளிக்கிழமை காலை 8.25 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு அடுத்தநாள் 9.30 மணிக்கு வந்தடையும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ரயில்வே முன்பதிவு மையங்களிலும், ஐஆர்சிடிசி தளத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

கோவிட் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல்வேறு ரயில் சேவைகள் மீண்டும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. விரைவு ரயில்களில் உணவு, படுக்கை வசதிகள் ஆகியவை மீண்டும் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க - மீண்டும் தலைதூக்கம் கொரோனா - 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மேலும், கோடை காலத்தில் சிறப்பு ரயில் சேவை மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கோவிட் பரவலை தடுக்க சில பாசஞ்சர் ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது.முன்னதாக, ரயில்வே மூலம் அனுப்பப்படும் பார்சல்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை ரயில்வே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Shirdi sai baba