Home /News /national /

சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!

சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.

    2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமிவிருதுகள் தில்லியில் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவற்றுக்கு விருதாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், தமிழ் மொழியில் 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதை தொகுப்புக்காக பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமிவழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளில் அம்பை குறிப்பிடத்தக்கவர். இவரது இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. 1960 ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, நாவல்கள், புதினங்களை எழுதி வருகிறார். பெண்ணியச் சிந்தனைகளையும், பெண்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

    Also read:  இந்தியாவின் ரஃபேலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்!

    சிறகுகள் முறியும், காட்டில் ஒரு மான், வீட்டில் மூலையில் ஒரு சமையலறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

    அதேபோல், 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' சிறுகதை தொகுப்பிற்காக மு.முருகேஷூக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது.

    கவிதை, சிறுகதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் மு.முருகேஷ். 2010ஆம் ஆண்டு முருகேஷ் எழுதிய 'குழந்தைகள் சிறுகதைகள்' என்ற நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

    Also read:  2021ல் விலையேற்றம் அடைந்தவை.. தக்காளி முதல் சிலிண்டர் வரை.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Sahitya academy award

    அடுத்த செய்தி