வாக்குச் சாவடியில் ’நமோ’ உணவுப் பொட்டலம்: விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

news18
Updated: April 11, 2019, 6:42 PM IST
வாக்குச் சாவடியில் ’நமோ’  உணவுப் பொட்டலம்: விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்
நமோ உணவுப் பொட்டலம்
news18
Updated: April 11, 2019, 6:42 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கவுதம் புத்தா நகரிலுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ’நமோ’ என்று பெயர் எழுதப்பட்ட ஆரஞ்சு வண்ண உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் கட்டமாக அருணாச்சலப்பிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கவுதம் புத்தா நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக, ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். அங்கே, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களுக்கு பா.ஜ.க கட்சியின் நிறமான ஆரஞ்சு வண்ண, ‘நமோ’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச தலைமைத் தேர்தல் ஆணையர், மாவட்ட நீதிபதியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மாவட்ட எஸ்.பி வைபவ் கிருஷ்ணா, ‘இந்த உணவுப் பொட்டலங்களுக்கும் பா.ஜ.கவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சிகளிடமிருந்து வாங்கிய உணவுப் பொட்டலங்களைக் காவல்துறையினர் பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள் என்று தவறான தகவல் பரவுகிறது. இது முற்றிலும் தவறானது. அருகிலுள்ள’நமோ’ என்ற கடையிலிருந்து உணவுப் பொட்டலங்கள் வாங்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சிகளிடமிருந்தும் அந்த உணவு வாங்கப்படவில்லை. ’நமோ’ என்ற கடையிலிருந்துதான் உணவு வாங்க வேண்டும் என்று காவலர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நியூஸ் 18-க்கு தெரிவித்த மாவட்ட நீதிபதி, ‘இது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை. பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு உணவு வேண்டுமா? வேண்டாமா? எதிர்பாராத விதமாக, கடையின் பெயர் அந்த உணவுப் பொட்டலத்தில் இருந்துள்ளது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக, நியூஸ் 18 செய்தியாளர் அந்தப் பகுதியிலுள்ள ’நமோ’ உணவகத்தில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து கடை உரிமையாளர், ‘தேர்தல் பணிக்காக எங்கள் கடையிலிருந்து எந்த உணவுப் பொட்டலங்களையும் வழங்கப்படவில்லை. எங்கள் கடை புதன்கிழமையிலிருந்து மூடப்பட்டுள்ளது. உணவுக்காக எங்கள் கடையில் ஆர்டர் எதுவும் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...