ஹோம் /நியூஸ் /இந்தியா /

பேசினால்தானே பிரச்னை...! மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா!

பேசினால்தானே பிரச்னை...! மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா!

பிரக்யா தாகுர்

பிரக்யா தாகுர்

தீவிரவாத வழக்கை சந்திக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பாஜக அதனை பொருட்படுத்தவே இல்லை.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறி கண்டனங்களை குவித்துக்கொண்ட போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா, தேர்தல் முடிவுகள் வரும் வரை மவுன விரதத்தில் இருக்கப்போவதாக கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா வேட்பாளராக போட்டியிடுகிறார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் இருக்கும் அவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே பெரும் பரபரப்பு எழுந்தது.

தீவிரவாத வழக்கை சந்திக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பாஜக அதனை பொருட்படுத்தவே இல்லை.

நடிகர் கமல்ஹாசன் கோட்சேவை இந்து தீவிரவாதி என்று பேசியதற்கு பதில் அளித்த சாத்வி, ”நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராகதான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்” என கூறினார். அவரின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின் அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதாக கூறி, மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில், பிரக்யா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாவத்துக்கு பரிகாரமாக மவுன விரதம் இருக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவடைந்த நிலையில், இது சுய பரிசோதனைக்கான நேரம். நான் கூறிய இந்த கருத்துகள் தேசத்தின் உணர்வை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். என்னை மனித்துவிடுங்கள். அதுக்கு பிராயசித்தமாக தேர்தல் முடிவுகள் வரும் வரை மவுன விரதம் மேற்கொள்ளப்போகிறான் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. போபால் தொகுதியில் சாத்வியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் திக்விஜயசிங் போட்டியிடுகிறார்.

First published:

Tags: Bhopal S12p19, Lok Sabha Election 2019