முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனாவை விட பெரிய ஆபத்து காத்திருக்கிறது!

கொரோனாவை விட பெரிய ஆபத்து காத்திருக்கிறது!

கொரோனாவை விட பெரிய ஆபத்து

கொரோனாவை விட பெரிய ஆபத்து

அப்ப இன்னும் 40ல இருந்து 50 வருசத்துல பூமியில 30% உணவு பஞ்சம் வரப்போகுது. இத தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட பஞ்சம் வந்தா யார் கிட்ட பெரிய துப்பாக்கி இருக்கோ அவங்க சாப்பாட்டை எடுத்துப்பாங்க.

  • News18 Tamil
  • 4-MIN READ
  • Last Updated :

கொரோனாவை விட பெரிய ஆபத்து காத்திருக்கிறது எனும் தலைப்பில் சத்குரு தமிழ் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

'தற்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தான் பெரிய பிரச்சனையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், மண் வளம் இழந்தால், அது இதை விட மிகப்பெரும் பாதிப்புகளை உலகளவில் ஏற்படுத்தும். ஆகவே, நாம் நமது கவனத்தை மண் வளம் காப்பதை நோக்கி திருப்ப வேண்டும். மண்ணில் உள்ள பல்லுயிர்களை காப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதர்களும் நாம் எத்தகைய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்பது குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும் என சத்குரு தொடர்ந்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

யூடியூபில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க மண்வளம் குறைஞ்சு பயிர்களின் வளர்ச்சி தடைபடும் நிலைமை உங்க தேசத்துல ஏற்பட்டா? இந்திய தலைநகரத்துல நிலைமை கலவரமா இருக்கு. அந்த பகுதியே விரைவில் பாலைவனமாக மாறப்போகுதோ எனும் பீதி ஏற்பட்டுள்ளது. பூமி பாலைவனம் ஆகுறதும், மண் அரிப்பு ஏற்படுறதும் கவலைக்குரிய ஒரு பிரச்சனை. மண் என்பது கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு இருப்பிடமாக இருக்கின்றது. அந்த வளமான உயிரினங்களால தான் எல்லாமே வளருது. நாம உணவு சாப்பிடுறோம். மிருகங்கள் வாழுது மண்ணு செழிப்பா இருக்குறதுனால தான் இது எல்லாமே நடக்குது. மண்ணில் வளம் இல்லாமல் போனது என்றால் நீங்கள் பல விதத்தில இந்த பூமியை கை விடறீங்கனு தான் அர்த்தம்.

நாம கார்பன் , உமிழ்வுகள் பத்தி பேசுறோம் , பல நிலைகளில் ஏற்படும் மாசுபாடு பத்தி பேசுறோம். அது எல்லாத்துக்கும் முன்னாடி நாம அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய ரொம்ப முக்கியமான விஷயங்களை கவனிக்கணும். குடிமை பிரச்சனை சுற்றுசூழல் பிரச்னையாக பிரச்சாரம் செய்யப்படுறதுனால அத பத்தி தவறான புரிதல் இருக்கு. இன்னைக்கு நியூயார்க் நகரத்துல பிளாஸ்டிக் பைகள் ஒருவேலை மிதந்துட்டு இருந்துச்சுனா அது சுற்று சூழல் பிரச்சனை கிடையாது. அது குடிமை பிரச்சனை. நம்ம நதிகள் மாசுபட்டா அத சரி செஞ்சுக்க முடியும். ஓரிரு ஆண்டுகள்ல தேவையான சுத்திகரிப்பு அமைச்சு சட்டத்தை அமல்படுத்தினா இதனை சரி செஞ்சுக்க முடியும்.

ஆனா உண்மையான பிரச்சனை மண். ஐ.நா சபை போதுமான அறிவியல் தகவல்களோட தெளிவா இத சொல்றாங்க. என்னனா இந்த பூமியில இன்னும் 80துல இருந்து 100 பருவங்களுக்கு மட்டுமே நமக்கு விவசாய மண் இருக்கும். அப்டினா இன்னும் 45ல இருந்து 60 ஆண்டுகள் மட்டுமே விவசாயத்திற்கு தேவையான மண் இருக்கும்னு சொல்றாங்க. இத மண் அழிதல்னு சொல்றாங்க. டைனோசர் , டூடோஸ் அழிஞ்சு போனத பத்தி கேள்வி பட்ருப்பீங்க. ஆனா இப்ப நாம எதிர்கொள்ள போறது மண் அழிவு. உண்மையான பிரச்சனை மண் அழிவு தான். கடந்த 30 ஆண்டுகள்ல 80% பூச்சி உயிரிகள் அழிந்து விட்டது.

இது தற்கொலை. உண்மையான தற்கொலை. அப்ப இன்னும் 40ல இருந்து 50 வருசத்துல பூமியில 30% உணவு பஞ்சம் வரப்போகுது. இத தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட பஞ்சம் வந்தா யார் கிட்ட பெரிய துப்பாக்கி இருக்கோ அவங்க சாப்பாட்டை எடுத்துப்பாங்க. இதன் மூலமா உலக மக்களுக்கு ஏற்படுற வேதனைகளும் , சீரழிவும் கற்பனை செஞ்சு பார்க்க முடியாத அளவு இருக்கும். ஏழைங்க மட்டும் தான் சாவாங்கனு நினைக்காதீங்க. அவங்க பணக்காரர்களையும் கொல்லுவாங்க. பணக்காரர்களும் இறப்பாங்க. இந்த கொடூரமான காட்சியை காட்டுறதுக்காக நான் இத உங்களுக்கு சொல்லல. இந்த மாதிரி சம்பவங்கள் நம்ம வரலாற்றில் பல முறை நடந்துருக்கு. வருங்காலத்துலயும் இப்படி நடக்கும்னு தலைமை விஞ்ஞானியால கணிக்கப்படுது. இது குறித்து நாம என்ன செய்ய போறோம்.

மண் ஏன் இப்படி அழியுது. அழிஞ்சு எங்க போக போகுது. மணலில் கரிம சத்துக்கள் சேர்ந்தால் மண்ணா மாறும். மண்ணுல இருக்குற கரிம சத்துக்களை எடுத்துட்டா மணலா மாறும். நீங்க மழை காட்டுக்குள்ள போனா மண்ணோட கரிம சத்து 70% இருக்கும். சாதாரண ஒரு விவசாய பூமியை மண்ணுனு சொல்ல மண்ணை மண்ணுனு அழைக்க 3ல இருந்து 6 % கரிம சத்து இருக்கணும். குறைஞ்சது 3 சதவிகிதமாவது இருக்கணும். ஆனா இந்தியாவுல இன்னைக்கு 60%ல வெறும் 0.5%க்கும் குறைவா தான் கரிம சத்து இருக்கு.

' isDesktop="true" id="691741" youtubeid="AvtcOL-vQdc" category="national">

குறைஞ்சது 3% மாவது கரிம சத்து இருக்கணும். இந்த பிரச்சனை ஒரு நாட்டுல மட்டும் இல்ல. உலகம் முழுக்க இருக்கு. நாம பாலைவனமாகுதல் விளிம்புல இருக்கோம். அமெரிக்கால களைக் கொல்லிகள், பூச்சி கொல்லிகள் பயன்படுத்திய விதத்துனால மண்ணுல 80% பல்லுயிர் பெருக்கம் முதல் 12 அங்குலம் நிலத்துல தான் நடக்குது. ட்ராக்டர்கள் 9-12 அங்குலம் நிலத்தை உழுதுட்டு மண்ணை அப்படியே திறந்த நிலையில விட்டுடுது. இதன் மூலமா மண்ணோட பல்லூரி பெருக்கத்தை நாம முழுசா அளிக்கிறோம். இத நாம humus னு அழைப்போம் humun எனும் வார்த்தையே humus எனும் வார்த்தையில் இருந்து வந்தது தான். humus என்றால் உயிர்ப்புள்ள மண். மண் நம்மளோட முக்கிய கவனம் பெறுவது ரொம்ப முக்கியம். ஏன்னா4ல 3 பகுதி நிலத்துல இருந்து 40% நிலத்தை குறிப்பாக வெப்ப மண்டல நாடுகள் நிலத்தை மர நிழலாட கீழ இருக்குற மாதிரி பாத்துக்கிட்டோம்னா பருவ நிலை மாற்றத்தை தலை கீழாக மாற்ற முடியும்.

ஏன்னா நிலம் வெப்பமாக மாறி வருகின்றது. ஒன்னு நிலத்தை உழுகுரோம் இல்லனா அதன் மேல நடைபாதை அமைக்கிறோம். நிலம் தாவரங்களின் நிழலில் இருக்கணும். அது எந்த விதமான தவறமா வேணாலும் இருக்கலாம். புற்கள் , மரங்கள் , புதர்கள் என எதுவா வேணாலும் இருக்கலாம். ஏன்னா இவை எல்லாமே சுற்று சூழல் செயல் பாட்டுக்கு பங்காற்றுது.

கார்பனை சேமிக்கும் ஒன்றாகவும் தண்ணீரை உறிஞ்சும் ஒன்றாகவும் மண் இருக்கு. மண் தான் எல்லா உயிர்களுக்கும் அடிப்படை. மேல் மண்ணோட முதல் 36ல இருந்து 35 இன்ச் மண் தான் இந்த பூமில வாழுற 87% உயிர்களோட உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கு. இந்த பல்லுயிரிகளை உயிரோட்டமாக பாதுகாக்க வேண்டியது தான் இப்ப செய்யவேண்டிய முக்கியமான விஷயம். நாம இப்ப இத ஆரம்பிக்கலனா இது நடக்கவே நடக்காது. இதுக்காக விழிப்பிணர்வான பூமி எனும் இயக்கததை தொடங்குறோம். நிறைய மக்களை இதில் ஈடுபடுத்தலாம்னு நினைக்கிறோம்.

இதையும் படியுங்கள் :  ' இலுமினாட்டி தற்போது எதையும் கட்டுப்படுத்துவதில்லை' - சத்குரு

பருவ கால மாற்றம், சுற்றுசூழல் மாற்றம் , இவை எல்லாம் பணக்காரர்களுக்கும் மேல் தட்டு மனிதர்களுக்கும் உடையதுனு நாம எல்லாரும் நினைக்கிறோம். அரசியல் காட்சிகள் தங்களோட கட்சிகள்ல சுற்றுசூழல் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அரசியல் கட்சிகள் சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அடிப்படையில தேர்வு செய்யப்படனும். இது நடந்ததாகனும். இந்த செயல் திட்டத்தை எப்படி திட்ட பரிந்துரையா வழங்குறதுனு 192 நாடுகள்ட்ட நாம பாத்துட்டு இருக்கோம். இந்த பேரணி 21 மார்ச் துவங்குகின்றது. லண்டன்ல துவங்கும். லண்டன்ல துவங்கி ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் 24 நாடுகள் 30,000 கிலோ மேட்டர் பயணிச்சு பயணம் மேற்கொள்ளும். தென்னிந்தியால காவேரி ஆற்று படுகைல பேரணி முடியும்.

83,000 பரப்பளவுள்ள இந்த ஆற்றுப்படுகைல 5.2 மில்லியன் விவசாயிகள் விவசாயம் செய்றாங்க. நம்ம உடம்பே மண்ணால ஆனது தான். அது செழிப்பாவும், வளமாவும் இல்லனா நம்ம உடம்பும் மற்றும் உயிர்களும் நல்லா வாழ முடியாது. அதனால சுற்று சூழல் ரீதிலயும் பருவநிலை மாற்ற ரீதிலயும் நாம செய்ய வேண்டியது என்னனா மண்ணை பாதுகாக்கவும், மண்ணுக்கு புத்துயிர்வூட்டவும் நாம பெரிய அளவுல மக்களை ஈடுபடுத்தனும். இந்த விழிப்புணர்வான பூமியை உருவாக்குவது ரொம்ப முக்கியமான விஷயம். பெரிய அளவுல மக்களை ஈடுபடுத்தலனா மக்கள் இல்லனா இது உண்மை ஆகப்போறது இல்லை. தேசங்கள் ஜனநாயக நாடாக இருக்குறதுனால இது தான் எங்களுக்கு வேணும்னு மக்கள் சொன்னாலே ஒழிய இது நடக்கவே நடக்காது. அதனால நாம விழிப்புணர்வான பூமியை உருவாக்குவோம் . இதனை நிகழச்செய்வோம்.

First published:

Tags: Sadhguru