ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை நடைதிறப்பு.. ஆன்லைன் புக்கிங் அவசியம்.. தேவசம்போர்டின் முக்கிய அறிவிப்புகள்!

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை நடைதிறப்பு.. ஆன்லைன் புக்கிங் அவசியம்.. தேவசம்போர்டின் முக்கிய அறிவிப்புகள்!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai Ayyappan Kovil | சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில் புக்கிங் செய்திருக்க வேண்டும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

    மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதியான நாளை மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் சபரிமலை மண்டல கால மகரவிளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    கடந்த மாத பூஜைக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டபோது தென் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவு வருவார்கள். இந்த ஆண்டு மண்டல கால மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    அதன் பின்னர் மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மலையாள மாதமான விருட்சிகம் 1-ம் தேதியான நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டலகால பூஜைக்காக டிசம்பர் 27-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

    அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ம் தேதி நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் புக்கிங் அவசியம். கடந்த காலங்களில் ஆன்லைன் முன்பதிவு கேரள போலீஸ் கவனித்து வந்தது.

    இப்போது, ஆன்லைன் புக்கிங் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது. ஆன்லைனில் புக்கிங் செய்ய தவறியவர்களுக்காக சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பார்ட் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன” என்றார்.

    Also see... கனமழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    மேலும் சபரிமலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக 13000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala