Home /News /national /

சபரிமலை சன்னிதானம் அருகே யானை கூட்டம்.. பக்தர்கள் அச்சம்

சபரிமலை சன்னிதானம் அருகே யானை கூட்டம்.. பக்தர்கள் அச்சம்

ஐயப்ப பக்தர்கள்

ஐயப்ப பக்தர்கள்

 பாண்டி தாவளம் பகுதியில் பல மணி நேரம் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பக்தர்கள் நிம்மதியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சபரிமலை சன்னிதானம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வலம் வரும் காட்டு யானை கூட்டம் ஐயப்ப பக்தர்களை பீதியடையச் செய்துள்ளது. இதேபோல தங்கும் விடுதிகளில் அழையா விருந்தாளியாக வந்து செல்லும் பாம்புகளால் அதிகாரிகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் என்பது புதிதல்ல. ஆனால் அதனை அருகில் பார்க்கும் போது யாருக்கும் அச்சம் எற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வழக்கமாக மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டவுடன், பக்தர்கள் கூட்டம் ஐயப்பனை தரிக்க குவிவார்கள். மனித நடமாட்டம் அதிகம் இருப்பதால் யானை போன்ற காட்டு விலங்குகள், சன்னிதானம் அருகே நெருங்காது. ஆனால், தற்போதைய நிலை வேறு மாதிரியாக உள்ளது. இரவு நடை அடைக்கப்பட்டவுடன், அவ்வப்போது காட்டு யானை கூட்டம், குட்டிகளுடன் வந்து சன்னிதானம் அருகே இருக்கும் பாண்டி தாவளம் பகுதியில் முகாமிடுகின்றன.

    Also Read:  சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    பாண்டி தாவளம் பகுதியில் பல மணி நேரம் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பக்தர்கள் நிம்மதியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்குள் அழையா விருந்தாளியாக பாம்புகள் படையெடுப்பது அதிகரித்துள்ளது. தரிசனம் காம்பிளக்ஸ் வளாகத்தில், நல்ல பாம்பு நுழைந்து, அப்பகுதியை சிறிது நேரம் பரபரப்பாக்கியது.

    Also Read:  தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை.. புதுச்சேரி அரசு உத்தரவு

    தங்கும் விடுதியில் நல்ல பாம்பு புகுந்தது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், பாம்பபை நெருங்குவதற்கு தயக்கம் காட்ட, பாம்பு பிடிக்க அனுபவம் உள்ளவர்களை தேடி சென்றனர். அவரை அழைத்து வருவதற்குள் நல்லபாம்பு நழுவி விட்டது. இந்த சம்பவத்தால் விடுதியில் இருந்தவர்கள் அச்சத்தால் தூக்கத்தை இழந்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Ayyappa Temple, Ayyappan temple in Sabarimala, Hindu Temple, Kerala, Sabarimala devotees, Tamil News

    அடுத்த செய்தி