முகப்பு /செய்தி /இந்தியா / மாசி மாத பூஜைக்காக இன்று சபரிமலை நடைதிறப்பு.. படையெடுக்கும் பக்தர்கள்!

மாசி மாத பூஜைக்காக இன்று சபரிமலை நடைதிறப்பு.. படையெடுக்கும் பக்தர்கள்!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai ayyapan temple | சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று முதல் திறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pathanamthitta, India

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மலையாள மாதத்தின் முதல் 5 நாள்கள் ஒவ்வொரு மாதமும் திறப்பது வழக்கம். அது தமிழ் மாதப்பிறப்பில் முதல் 5 நாள்களாக கணக்கிடலாம். அந்தவகையில் மாசி மாத பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திருநடையைத் திறந்து வைத்து தீபம் ஏற்றினார். இன்று  முதல் 17-ம் தேதிவரை நடை திறந்து இருக்கும். இந்த நாள்களில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறந்து நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் தொடங்கும். மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் இந்த நாள்களில் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து கோயில் நிர்வாகம் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஆன்லைன் முன்பதிவும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. நடை திறந்திருக்கும் இந்த 5 நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். நடை திறக்கப்படும் 12ம் தேதி மதியம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல், பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுன்டர்கள் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimalai, Sabarimalai Ayyappan temple