முகப்பு /செய்தி /இந்தியா / சபரிமலையில் இந்த ஆண்டு இத்தனை கோடி வருமானமா? இன்னும் நாணயங்கள் எண்ணல!

சபரிமலையில் இந்த ஆண்டு இத்தனை கோடி வருமானமா? இன்னும் நாணயங்கள் எண்ணல!

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில்

Kerala sabarimalai income | சபரிமலையில் இந்த ஆண்டு நடைபெற்ற மகரவிளக்கு சீசனில் ரூ.351 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pathanamthitta | Kerala

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், மண்டல மகரவிளக்கு காலத்தில் ரூ.351 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அட்வ.எஸ்.ஆனந்தகோபன், இதுவரை எண்ணப்பட்ட காணிக்கையில் ரூ.351 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும், இனி தான் நாணய காசுகள் எண்ணப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் நாணயங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காசு எண்ணும் ஊழியர்கள் தொடர்ந்து 70 நாட்களாக பணிபுரிந்து வருவதாலும், ஊழியர்களுக்கு சுகாதார பிரச்சனைகள் இருப்பதாலும் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாணயங்கள் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவணை பாயசத்திற்கு பயன்படுத்தப்படும் ஏலக்காயின் தரம் குறித்து ஆட்சேபனை உயர்ந்துள்ளதால்  எதிர்காலத்தில் ஏலக்காயை பயன்படுத்தாமல் அரவணை தயார் செய்வது குறித்து  பரிசீலிக்கப்படும் என்றும், ம்பையில் உள்ள ஆய்வகத்தில் அனைத்து பொருட்களும்  பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Kerala, Sabarimalai, Sabarimalai Ayyappan temple