Home /News /national /

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு

  • News18
  • Last Updated :
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 

    கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதை தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் விசாரணை, கடந்த ஆகஸ்டு மாதம் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில்,  கேரள அரசு பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என தெரிவித்தது. ஆனால் இதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தாம் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து  வருகிறது. இந்நிலையில் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த வழக்கிற்கான தீர்ப்பு  இன்று அளிக்கப்படுகிறது. 

    ALSO WATCH...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sabarimala Temple Case, Sabarimala Verdict, Supreme court, Women

    அடுத்த செய்தி