ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில்

ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

முதல் நாளான இன்று, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றவுள்ளார். இதையடுத்து, இன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர், நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் தொடங்கும்.

அதைத்தொடர்ந்து, புஷ்பாபிஷேகமும், படிபூஜையும் செய்த பின் நாளை இரவு 10:00 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதை யொட்டி, சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டை உள்பட முக்கிய பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also see... பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்!

Also see...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see....


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Kerala, Sabarimala Ayyappan