சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - ஓணம் பண்டிகையையொட்டி 5 நாட்கள் சிறப்பு பூஜை..

ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - ஓணம் பண்டிகையையொட்டி 5 நாட்கள் சிறப்பு பூஜை..
ஓணம் பண்டிகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோயிலில் 5 நாட்கள் சிறப்பு பூஜை
  • Share this:
தமிழகத்துக்கு பொங்கல் பண்டிகையைப் போல கேரளாவில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது ஓணம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் திருவோணம் கொண்டாடப்பட உள்ளது.



இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை உத்ராட சிறப்பு பூஜையும், 31ம் தேதி திருவோண வழிபாடும், ஒன்றாம் தேதி அவிட்ட நாள் பூஜையும், 2ம் தேதி சதய பூஜையும் நடைபெற உள்ளன.

இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 நாள் சிறப்பு பூஜைக்கு பிறகு 2ம் தேதி மாலை 7.30 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, புரட்டாசி மாத பூஜைக்காக 16ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
First published: August 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading